கால்களை இழந்த பூனைக்கு மருத்துவர் செய்த பேருதவி.. கிரீஸில் நெகிழ்ச்சி சம்பவம்

பூனைக்கு செயற்கை கால்கள்

இந்த பூனையை தத்தெடுக்க பலரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், சிகிச்சை அளித்த மருத்துவரே பெர்சியஸை வளர்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கிரீஸில் மூன்று கால்களை இழந்த பெர்சியஸ் என்னும் பூனைக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன.

  ஓராண்டுக்கு முன் நடக்க முடியாத நிலையில் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த பூனைக்கு மருத்துவர்களும், பொறியாளர்களும் இணைந்து மூன்று கால்களைப் பொருத்தியுள்ளனர். டைட்டானியம் மூலம் கால்களின் உள் பாகங்களும், 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் பிளாஸ்டிக் பாதங்களும் உருவாக்கப்பட்டன.

  இவை வெற்றிகரமாகப் பொருத்தப்பட்ட நிலையில், அடுத்த 10 விநாடிகளில் இயல்பாக நடமாடத் தொடங்கியிருக்கிறது பெர்சியஸ்.  இந்த பூனையை தத்தெடுக்க பலரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், சிகிச்சை அளித்த மருத்துவரே பெர்சியஸை வளர்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

     Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: