ட்விட்டர் சி.இ.ஓ மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே மீது பிராமண சமூகத்தைக் காயப்படுத்தும் விதமாக புகைப்படம் வெளியிட்டதாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Web Desk | news18
Updated: December 2, 2018, 1:22 PM IST
ட்விட்டர் சி.இ.ஓ மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே மீது பிராமண சமூகத்தைக் காயப்படுத்தும் விதமாக புகைப்படம் வெளியிட்டதாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Web Desk | news18
Updated: December 2, 2018, 1:22 PM IST
ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே மீது பிராமண சமூகத்தைக் காயப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே மீது விப்ரா அறக்கட்டளையின் துணைத்தலைவர் ராஜ்குமார் சர்மா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு விசாரணையில், ”ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே தனது ட்விட்டர் பக்கத்தில் ’பிராமண ஆதிக்கம் ஒழிக’ என்பது போன்ற ஒரு அட்டையைக் கையிலேந்தி புகைப்படம் வெளியிட்டிருந்தார். இது பிராமணர்களுக்கு எதிரானதாக மட்டுமல்லாமல் சமூகத்தினரைக் காயப்படுத்தும் விதமாக உள்ளது” என ராஜ்குமார் சர்மா கூறியிருந்தார்.

இதையடுத்து ராஜஸ்தான் நீதிமன்றம் உடனடியாக ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரனையைத் தொடருமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் ட்விட்டர் சிஇஓ மீது 295 A, 500, 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே வெளியிட்டுள்ள ட்விட்டர் புகைப்படத்தில் கையில் வழக்கில் குறிப்பிட்ட பதாகையை ஏந்தி ஆறு பெண் பத்திரிகையாளர்களுடன் இணைந்து போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் பார்க்க: ஏழு தமிழர் விடுதலை: ஆளுநருக்கு விஜய் சேதுபதி, பா.ரஞ்சித் ட்வீட்
First published: December 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...