Home /News /international /

பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மறுத்த ரஷ்ய அதிபர் புடின் - வீடியோ

பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மறுத்த ரஷ்ய அதிபர் புடின் - வீடியோ

ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி

ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி

உக்ரைனில் உள்ள மோதல்கள் தொடர்பாகன இந்தியாவின் நிலைப்பாட்டு குறித்து தனக்கு தெரியும் என கூறினார். மேலும் இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று தான் ரஷ்யாவும் விரும்புவதாக தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • intern, IndiaSamarkandSamarkandSamarkand
    “நாளை உங்கள் பிறந்தநாள் என எனக்கு தெரியும் ஆனால் ரஷ்ய கலாச்சாரத்தில் முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பழக்கம் இல்லை” என பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.

    உஸ்பெகிஸ்தான் சமர்காண்ட் நகரத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் உக்ரைன் ரஷ்ய போர் தொடங்கிய பின், முதல் முறையாக ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார்.

    அப்போது, உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்து வருவது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, இது போருக்கான காலம் இல்லை என குறிப்பிட்டார். இது தொடர்பாக ஏற்கனவே தொலைபேசியில் பேசியதாகவும், அமைதி வழியில் பிரச்னைக்கு தீர்வு காணுவது சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், உக்ரைனில் உள்ள மோதல்கள் தொடர்பாகன இந்தியாவின் நிலைப்பாட்டு குறித்து தனக்கு தெரியும் என கூறினார். மேலும் இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று தான் ரஷ்யாவும் விரும்புவதாக தெரிவித்தார்.



    இந்த பேச்சுவார்த்தையின் போது, “நாளை உங்கள் பிறந்தநாள் என எனக்கு தெரியும் ஆனால் ரஷ்ய கலாச்சாரத்தில் முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பழக்கம் இல்லை, இருப்பினும் இந்தியாவிற்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Modi Birthday, PM Modi, Putin modi

    அடுத்த செய்தி