Home /News /international /

கேன்ஸ் திரைப்பட விழாவில் நிர்வாண போராட்டம்: உக்ரைனில் பாலியல் வன்கொடுமையை நிறுத்த வலியுறுத்தல்

கேன்ஸ் திரைப்பட விழாவில் நிர்வாண போராட்டம்: உக்ரைனில் பாலியல் வன்கொடுமையை நிறுத்த வலியுறுத்தல்

கேன்ஸ் திரைப்பட விழா

கேன்ஸ் திரைப்பட விழா

Cannes: தனது உடலில் பலாத்காரத்தை நிறுத்துங்கள் என எழுதியிருந்த பெண், உக்ரைனில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்தக் கோரி கோஷம் எழுப்பினார்.

    உக்ரைன் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை நிறுத்த வலியுறுத்தி கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர் ஆடைகளை களைந்து நிர்வாணப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான திரை பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளன. உலகின் மதிப்புமிக்க திரைப்பட விழாவாக இது கருதப்படுகிறது. இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்பதை பெரிய அங்கீகாரமாக  திரைப்பட கலைஞர்கள் கருதுகின்றனர்.  நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன், இயக்குநர் ரஞ்சித், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என இந்திய திரைப் பிரபலங்கள் பலர் இந்த விழாவில் தற்போது பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், நேற்று முன் தினம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இயக்குநர் ஜார்ஜ் மில்லிய இயக்கிய three thousand year of longing  என்ற திரைப்படத்தின்  திரையிடல் நடைபெற்றது. இதில் பங்கேற்க ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது பெண் ஒருவர் திடீரென தனது ஆடைகளை களைந்து சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும் பகுதிக்குள் நுழைந்தார்.

    இதையும் படிக்க: இரு வாரங்களுக்குப் பின் இலங்கையில் அவசர நிலை நீக்கம்


    தனது உடலில் பலாத்காரத்தை நிறுத்துங்கள் என எழுதியிருந்த பெண், உக்ரைனில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்தக் கோரி கோஷம் எழுப்பினார். அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக அவர் உடலில் துணியை போர்த்தி அவரை அழைத்து சென்றனர். இதன் காரணமாக அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Russia - Ukraine, Violence against women

    அடுத்த செய்தி