உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'... திரைஉலகினர் வருகையால் களைக்கட்டும் பிரான்ஸ்

திரைப்படத்துறை சார்ந்தவர் மற்றும் பத்திரிகையாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதுடன், உரிய அழைப்பு இருந்தால் மட்டுமே விழா அரங்கிற்குள் நுழைய முடியும்.

Web Desk | news18
Updated: May 14, 2019, 8:13 AM IST
உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'... திரைஉலகினர் வருகையால் களைக்கட்டும் பிரான்ஸ்
கோப்பு படம்
Web Desk | news18
Updated: May 14, 2019, 8:13 AM IST
உலகப் புகழ்பெற்ற "கேன்ஸ் திரைப்பட விழா" பிரான்சில் களைகட்டியுள்ளது. இதில் பங்கேற்க ஹாலிவுட் உள்ளிட்ட உலகின் திரை நட்சத்திரங்கள் சங்கமித்துள்ளதால் கேன்ஸ் நகரமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

சர்வதேச அளவில் திரைப்பட விருதுகளில் ஆஸ்கார் மற்றம் கோல்டன் குளோப் முதன்மையானதாக கருதப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக, பெர்லின், வெனிஸ், டொராண்டோ வரிசையில் கேன்ஸ் திரைப்பட விழாவும் உலக அளவில் மிகவும் பிரபலமாகும். பிரான்சின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் மே மாதம் இவ்விழா களைகட்டுவது வழக்கம். அந்த வகையில், "72-வது கேன்ஸ் திரைப்பட விழா" இன்று முதல் வருகின்ற 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கேன்ஸ் விழாவில், சர்வதேச பொழுதுபோக்கு திரைப்படங்களுடன், குறும்படம், ஆவணப்படங்களும் போட்டியிடுவது பாரம்பரியமான ஒன்றாகும். சிறந்த படத்திற்கு "GOLDEN PALM AWARD" எனப்படும் தங்கப் பனை விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இதற்கான போட்டியில் 21 படங்கள் இடம்பெற்றுள்ளன.


அத்துடன், சிறந்த இயக்குநர், கதாசிரியர், நடிகர், நடிகை உள்ளிட்ட பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது தேர்வுக்குழுவின் தலைவராக மேக்சிகோ நாட்டைச் சேர்ந்த இயக்குனரும், தயாரிப்பாளருமான அலெஜாண்ட்ரோ கான்சலஸ்(Alejandro González) நியமிக்கப்பட்டுள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் அமெரிக்க இயக்குநர் ஜிம் ஜார்மூச்-ன் (Jim Jarmusch) "தி டெட் டோன்ட் டை" ("THE DEAD DONT DIE") முதலில் திரையிடப்படுகிறது. மேலும், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாரன்டினோவின் (Tarantino), "ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்" (Once Upon a Time in Hollywood) மற்றும் கேன்ஸ் வரலாற்றில் முதன்முறையாக கருப்பின பெண் இயக்குனரான பிரான்சிஸ் மட்டி டியோப் இயக்கிய படம் உள்ளிட்டவை திரையிடப்படுகின்றன.

இவ்விழாவில் திரைப்படத்துறை சார்ந்தவர் மற்றும் பத்திரிகையாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதுடன், உரிய அழைப்பு இருந்தால் மட்டுமே விழா அரங்கிற்குள் நுழைய முடியும். அத்துடன், சிகப்புக் கம்பள வரவேற்பில் நடிகைகள், பல்வேறு புதுமையான ஆடைகளில் பவனி வருவதை காண உலக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Loading...

இவ்விழாவில் ஹாலிவுட் உட்பட உலக திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொள்வதால் கேன்ஸ் நகரமே களைகட்டியுள்ளது. இதில் விருதுபெறும் பெரும்பான்மை படங்கள் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் செல்லும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

Also Watch

First published: May 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...