கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட சந்தோஷத்தில் உறைந்த ஏரியில் நடனமாடிய கனடிய வாழ் இந்தியர்

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட சந்தோஷத்தில் உறைந்த ஏரியில் நடனமாடிய கனடிய வாழ் இந்தியர்

எல்லாவற்றையும் பிரமாண்டமாக கொண்டாடுவதில் பஞ்சாபியர்கள் பெயர் போனவர்கள் என்பது போல, தான் தடுப்பூசி போட்டுக்கொண்டதை கொண்டாட கனேடிய பாங்க்ரா கலைஞர் குர்தீப் பாந்தர், கனடாவின் உறைந்த ஏரியில் நடன நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தார்.

எல்லாவற்றையும் பிரமாண்டமாக கொண்டாடுவதில் பஞ்சாபியர்கள் பெயர் போனவர்கள் என்பது போல, தான் தடுப்பூசி போட்டுக்கொண்டதை கொண்டாட கனேடிய பாங்க்ரா கலைஞர் குர்தீப் பாந்தர், கனடாவின் உறைந்த ஏரியில் நடன நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தார்.

 • Share this:
  கொரோனா வைரஸ் பாதிப்பு உலகை சீர்குலைத்தது மட்டுமல்லாமல் ஒரு வருடத்தில் மில்லியன்கணக்கான உயிர்களை பறித்துள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பு இன்னும் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இப்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் சில பக்கவிளைவுகள் ஏற்படுவதாக வரும் செய்திகள் மக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியது.

  இதற்காக மக்களிடையே பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசாங்கங்கள் ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வரும் பாதிப்புகளால் இந்தியா உட்பட உலகெங்கிலும் பலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்த வகையில் கனடிய வாழ் இந்தியர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதை கொண்டாடும் வகையில் நடனமாடி அதனை இணயத்தில் பகிர்ந்துள்ளார்.

  https://twitter.com/GurdeepPandher/status/1379856351703228421

  எல்லாவற்றையும் பிரமாண்டமாக கொண்டாடுவதில் பஞ்சாபியர்கள் பெயர் போனவர்கள் என்பது போல, தான் தடுப்பூசி போட்டுக்கொண்டதை கொண்டாட கனேடிய பாங்க்ரா கலைஞர் குர்தீப் பாந்தர், கனடாவின் உறைந்த ஏரியில் நடன நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தார். நம்மில் பெரும்பாலானோருக்கு பனியில் நடந்து செல்வது மிக கடினமாக இருக்கும். ஆனால் குர்தீப் தனது அற்புதமான பங்க்ரா திறன்களை உறைபனி ஏரியில் நின்று வெளிப்படுத்திய விதம் பார்ப்போரை வியக்க வைத்தது. இந்த வீடியோ வெளியான 2 நாட்களில் கிட்டத்தட்ட 7 லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது. மேலும் 28K-க்கும் மேற்பட்ட லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கான ரீட்வீட்களை பெற்றுள்ளது.

  மேலும், கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்டது குறித்து அவர் தனது வீடியோ பதிவில், "கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு நான் தூய்மையான இயற்கையின் அன்னையின் ஒரு உறைந்த ஏரிக்குச் சென்றேன். அங்கு மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் நேர்மறை ஆகியவற்றிற்காக பாரம்பரிய பஞ்சாபி பங்க்ரா நடனத்தை ஆடினேன். இதை நான் கனடாவிற்கும் அதற்கு அப்பால் உள்ள அனைவரின் ஆரோக்கியத்திற்கும் சமர்ப்பிக்கிறேன்" என்று கேப்ஷன் செய்துள்ளார்.

  ஏற்கனவே குர்தீப் கடந்த ஏப்ரல் 2ம் தேதி தனது தடுப்பூசியின் முதல் டோஸை பெற்ற பிறகு இதேபோன்று நடனமாடி ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. மேலும், 3 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றது. தற்போது அவர் வெளியிட்ட மற்றொரு வீடியோவும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்ட குர்தீப்க்கு நெட்டிசன்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற கடுமையான காலங்களில் மகிழ்ச்சியைப் பகிர்ந்தமைக்கு நன்றி என பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ram Sankar
  First published: