கனடா - அமெரிக்கா எல்லை அருகே கடுமையான உறைபனியில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கனடா - அமெரிக்க தூதரகங்கள் மூலமாக பேச்சவார்த்தை நடத்திய மத்திய வெளியுரவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உயிரிழந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய உதவிகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக வட அமெரிக்காவைச் சேர்ந்த கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கனடாவின் மனிசோடா மாகாணம் எமர்சன் நகர் அருகே, கடந்த 20ம் தேதி உறைபனியில் சிக்கி உயிரிழந்த நிலையில் கிடந்த ஒரு குழந்தை உட்பட நான்கு பேரின் சடலங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க: சோதனையில் சிக்காத "கள்ள ஒமைக்ரான்".. முந்தைய வகைகளைக் காட்டிலும் அதிவேகமாக பரவுவதால் அச்சம்!
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கனடாவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்க எல்லைக்குள் அவர்கள் நுழைய முயன்று உள்ளனர். அப்போது கடும் பனிப் பொழிவை தாங்க முடியாமல் அனைவரும் இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர்கள் அனைவரும் குஜராத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, “அமெரிக்கா – கனடா எல்லையை கடக்க முயன்ற 4 இந்தியர்கள் கடுங்குளிர் தாக்கி உயிரிழந்தது மிகவும் துயரமான சம்பவம். கனடா – அமெரிக்க எல்லையை சட்ட விரோதமாக கடக்க வேண்டாம் என மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: இந்திய பெருங்கடலில் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் நாடுகளின் கடற்படை கூட்டுப்பயிற்சி!இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.