ஹோம் /நியூஸ் /உலகம் /

இலங்கையில் மனித உரிமை மீறல்.. ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா தடை..!

இலங்கையில் மனித உரிமை மீறல்.. ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா தடை..!

கடனாவில் நுழையத் தடை

கடனாவில் நுழையத் தடை

இலங்கை முன்னாள் அதிபர்கள் கோத்தபய ராஜபக்சே, மகிந்தா ராஜபக்சே உள்ளிட்ட 4 பேருக்கு கனடாவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, Indiacanada

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனிதஉரிமை மீறல்களை ராணுவம் அரங்கேற்றியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் அதிபரும், உள்நாட்டுப் போரின்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவருமான கோத்தபய ராஜபக்சே, அவரது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்தா ராஜபக்சே ஆகியோருக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.

இதேபோல, 2000-ம் ஆண்டில் தமிழர்களை படுகொலை செய்ததாக மரண தண்டன விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரி சுனில் ரத்னாயகே, கடற்படை கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி ஆகியோருக்கும் கனடா அரசு தடைவிதித்துள்ளது. இந்தத் தடையின்படி, இந்த 4 பேரும் கனடாவுடன் நிதி பரிமாற்றங்களில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது. கனடாவுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்களின் போராட்டத்தால் கோத்தபய ராஜபக்சே, மகிந்தா ராஜபக்சே ஆகியோர் பதவிவிலகியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Canada, Gotabaya Rajapaksa, Mahinda rajapaksa