கருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு 21 நொடிகள் நிதானித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிலளித்த காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

கருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
  • Share this:
கனடா தலைநகர் ஒட்டாவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் ட்ரூடோவிடம், அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை தொடர்பாக நிகழ்ந்து வரும் போராட்டங்களை அதிபர் ட்ரம்ப் கையாளும் விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு உடனடியாக பதிலளிப்பதைத் தவிர்த்த ட்ரூடோ 21 நொடிகள் வரை மௌனம் சாதித்தார்.

பின்னர் பேசத் தொடங்கிய ட்ரூடோ, இனப்பாகுபாட்டிற்கு எதிரான கூட்டணியில் கனடாவும் இருக்கும் என்று கூறினார். இதன் மூலம் அமெரிக்க அதிபருடனான தனது நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதை ட்ரூடோ தவிர்த்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.Also see:
First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading