பொங்கல் திருநாளை முன்னிட்டு கனடா பிரதமர் வாழ்த்து

பொங்கல் திருநாளை முன்னிட்டு கனடா பிரதமர் வாழ்த்து
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • Share this:
பொங்கல் திருநாளை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைத்திருநாளான முதல் நாள் நெல் அறுவடை செய்து, தை முதல் நாளில், சூரியனை வணங்கி, பொங்கல் வைத்து வழிபடுபது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தமிழில் வணக்கம் தெரிவித்து தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.
கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது எனக் கூறியுள்ளார். தை பொங்கல் கொண்டாடும் இந்த வேளையில், தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading