Home /News /international /

இனி சிகரெட்டிலேயே எச்சரிக்கை: கனடாவின் நூதன முயற்சி!

இனி சிகரெட்டிலேயே எச்சரிக்கை: கனடாவின் நூதன முயற்சி!

கனடாவின் புதிய சிகரெட் திட்டம்

கனடாவின் புதிய சிகரெட் திட்டம்

Canada's new cigar health warning: சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களின் டிப்பிங் தாளிலேயே இனி  சுகாதார எச்சரிக்கைகளை அச்சிட வேண்டும்.

புகைபிடித்தல் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. இது படங்களின் தொடக்கத்தில், புகைபிடிக்கும் காட்சிகளின் போது திரையின் கீழ் போடுவதைப் பார்த்திருப்போம். ஏன் அந்த சிகரெட்டுகள் வரும் பெட்டியின் மேல்-அட்டையிலேயே அதன் தீங்குகளை வலியுறுத்தும் புகைப்படத்தோடு கூடிய எச்சரிக்கை வாசகங்களைப் பார்த்திருப்போம். இவை எல்லாமே புகைபிடிக்கும் பழக்கத்தை மக்களிடம் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்படுவது தான். ஆனால் எந்த நாட்டிலும் இந்த புகைபிடிக்கும் பழக்கம் குறைந்தபாடில்லை. சிகரெட்டுகள் விற்பனையும் குறையவில்லை.

இந்த நிலையில் புகைபிடிப்பதைக் குறைக்கும் முயற்சியில், கனேடிய அரசாங்கம் ஒரு புதிய நூதன வழியை செயலாக்கத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பாக்கெட்டுகளில் இடம்பெற்றுள்ளதைத் தாண்டி தனிப்பட்ட சிகரெட்டுகளின் மீதும் கட்டாய எச்சரிக்கைகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. இத்திட்டம் குறித்து அரசாங்கம் தயாரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்து, செயல்படத் திட்டமிட்டுள்ளது. இத்தகைய லேபிளிங்கை அறிமுகப்படுத்தும் உலகின் முதல் நாடாக கனடா இருக்கும்.



ஹெல்த் கனடாவின் வெளியீட்டின்படி, புதிய பேக்கேஜிங்கிற்கான யோசனையின் பின்னணியில் உள்ள நோக்கம், “சிகரெட்டை அதிகம் பயன்படுத்தும் இளைஞர்கள் மற்றும் மத்திய வயதினருக்கு அதன் தீங்குகளை சுட்டிக்காட்டவே அதன் அட்டைகளில் சுகாதாரம் தொடர்பான செய்திகள், எச்சரிக்கைகளை அச்சடிக்கிறோம். ஆனாலும் அதை எடுத்துக்கொள்ளும் மனிதர்களின் எண்ணிக்கை குறைய வில்லை. அளவும் குறைய வில்லை.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 48,000 பேர் இந்த புகைப்பழக்கத்தால் தீவிர நோய்களுக்கு உள்ளாகி, இறந்தும் போகின்றனர். அட்டையின் மேல் உள்ள எச்சரிக்கைகளை பார்த்துப் பார்த்து பழகிப்போய் விட்டது என நினைக்கிறோம். அதை மீண்டும் அவர்களுக்கு நினைவூட்டவே இம்முயற்சி. எனவே, சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களின் டிப்பிங் தாளிலேயே இனி  சுகாதார எச்சரிக்கைகளை அச்சிட வேண்டும். அதனால் அந்த பொருட்களின் உபாயகம் குறைக்கப் படும் என்று அரசு நம்புகிறது”.

சீனாவில் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை- புதிய அலைக்கு ஆயத்தமாகிறதா?

“கனடாவின் இந்தப் புதிய உத்தியின் மூலம் 2035 ஆம் ஆண்டில் புகையிலை பயன்பாட்டை 13% இலிருந்து 5% க்கும் குறைவாகக் குறைக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாடு முழுவதும் உள்ள அனைவரும் புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் அபாயங்கள் குறித்த நம்பகமான தகவல்களைப் பெறுவதை உறுதிசெய்து, அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்பதை உணர்த்துவது முக்கியமானதாகும். அதைத் திறம்பட செய்து முடிப்போம் என்று நம்புகிறோம்”என்று சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் கூறினார்.

2001 கிராபிக் முறையில் சிகரெட் அட்டைகளின் ஆரோக்கிய எச்சரிக்கையை அச்சிடும் முறையை முதலில் கொண்டுவந்ததும் கனடா நாடு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Canada, Health, Lungs health

அடுத்த செய்தி