கனடாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6-ஆக பதிவு

news18
Updated: October 22, 2018, 2:08 PM IST
கனடாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6-ஆக பதிவு
கனடாவில் உள்ள வான்கூவர் நகரம்.
news18
Updated: October 22, 2018, 2:08 PM IST
கொலம்பியாவை ஒட்டிய கனடா நாட்டிற்கு உட்பட்ட கடற்கரைப் பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் சற்று முன் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. 

கனடாவின் வான்கூவரில் சற்றுமுன் ரிக்டர் அளவில் 6.6 ஆக நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சில நிமிடங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு நிலநடுக்கங்களும் வான்கூவர் தீவில் தென்மேற்கில் உள்ள போர்ட் ஹார்டி மற்றும் வடகிழக்கு பகுதியிலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சுனாமிக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பூகம்பங்கள் பதிவாகின்றது. இதில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் மேற்கு கனடாவில் ஏற்படுகிறது. ஆனால் அதில் 50 மட்டுமே மக்களால் உணரப்படுவதாக கனடா புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
First published: October 22, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...