ஹோம் /நியூஸ் /உலகம் /

மே18ஐ தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக அறிவித்த கனடா நாடாளுமன்றம்

மே18ஐ தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக அறிவித்த கனடா நாடாளுமன்றம்

தமிழ் இனப்படுகொலை நினைவுநாள்

தமிழ் இனப்படுகொலை நினைவுநாள்

Tamil Genocide Remembrance Day (May 18)மே18ம் தேதியை தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக கனடா அறிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை கனடா ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச அளவில் இதனை ஏற்றுகொண்டுள்ள முதல் நாடு கனடா ஆகும்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இலங்கையில் உள்நாட்டு போரின்போது  தமிழர்கள் கொல்லப்பட்டதை நினைவுக் கூரும் வகையில் மே 18ம் தேதியை தமிழர் இனப்படுகொலை நினைவுநாளாக கனடா அறிவித்துள்ளது.

  இலங்கையில் தனி ஈழம் கேட்டு விடுதலை புலிகள் அமைப்புக்கு அந்நாட்டு ராணுவத்துக்கு இடையே நீண்ட போர் நடைபெற்றது. கடந்த 2009ம் ஆண்டு இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது ஏராளமான தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். மே 18ம் தேதி விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்ததை தொடர்ந்து உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது.

  இந்த உள்நாட்டு போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுக்கூரும் வகையில் மே18ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவுநாள் எனவும் தமிழர் இனப்படுகொலை நாள் எனவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் அந்நாட்டு அரசு மனிதாபிமானமற்ற வகையில் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

  இந்நிலையில், மே18ம் தேதியை தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக கனடா அறிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை கனடா ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச அளவில் இதனை ஏற்றுகொண்டுள்ள முதல் நாடு கனடா ஆகும்.

  இதையும் படிங்க: பெட்ரோல் வாங்க பணம் இல்லை: பங்குகளில் காத்திருக்க வேண்டாம்- இலங்கை அமைச்சர்

  கனடா எம்பி ஹரி ஆனந்தசங்கரி இந்த தீர்மானத்தை கனடா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இலங்கையில் நடைபெற்றது  இனப்படுகொலை என்பதை ஏற்பதாகவும், இனப்படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுக்கூர மே18ம் தேதி தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக கடைபிடிக்கப்படும் என்றும் அவர் பேசினார்.  ஏற்இந்த தீர்மானம் ஏகமனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

  இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், “மே 18 ஐ தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக  அங்கீகரித்திருப்பதில் ஒரு தமிழ் கனடியனாக நான் பெருமை கொள்கிறேன். இலங்கையில் 26 ஆண்டுகால ஆயுதப் போரில் பரிதாபமாக உயிரிழந்தவர்களை ஒவ்வொரு ஆண்டும் நாம் கௌரவித்து நினைவுகூருவோம்” என பதிவிட்டுள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Canada, Srilankan Tamil, Srilankan tamil war