ஈஸ்டர் தாக்குதலுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோரிய சஜித் பிரேமதாஸா...!

சஜித் பிரேமதாஸா

 • News18
 • Last Updated :
 • Share this:
  இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைந்துள்ளது. இதில், ஈஸ்டர் தாக்குதலுக்கு பொதுமக்களிடம் சஜித் பிரேமதாஸா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

  இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை மறுதினம் நடைபெறுகிறது.

  இதில், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாஸா, இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட 34 பேர் களத்தில் உள்ளனர்.

  இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றிரவுடன் முடிவடைந்தது. நீர்க்கொழும்பு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட சஜித் பிரேமதாஸா, கடந்த ஏப்ரல் 21-ம் தேதி தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அமைச்சர் என்ற முறையில் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகக் கூறினார்.

  தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், தேவாலயங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கும் கவலை அடைவதாக சஜித் பிரேமதாஸா கூறினார்.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: