Sri Lanka's Presidential Election: இலங்கையில் அதிபர் தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு

  • News18
  • Last Updated :
  • Share this:
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இலங்கையில் அதிபருக்கான தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இருப்பினும், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரமதாஸாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் தேர்தல் அறிக்கையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதலீடுகளை மேற்கொள்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அதேபோல், ஐக்கிய தேசிய முன்னணி கட்சி, மலையக தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் சிறப்பு சட்டம் அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில், தீவிரமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனிடையே தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது.

 

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: