காதல் என்ற வார்த்தையே ஒரு அழகான கவிதைதான்... காதல் சிலருக்கு கைக்கூடியிருக்கும். பலருக்கும் அது பசுமரத்தாணி போல் மனதில் புதைந்திருக்கும். அந்தக்கவிதையை திரும்ப திரும்ப புரட்ட நினைப்பவர்களும் இருக்கிறார்கள். வாழ்வின் கசப்பான பக்கமாக அதை கடந்துவிட நினைப்பவர்களும் இருக்கிறார்கள். கலிபோர்னியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலின் அடிச்சுவடு கூட இருக்கக்கூடாது என 10,000 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு தன் காதலின் அடையாளத்தை உடைத்துவிட்டு சென்றுள்ளார். காதல் பூட்டு குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மேற்கிந்திய நாடுகளில் இந்த காதல் பூட்டு மிகவும் பிரபலம்.
மேலைநாடுகளில் இதை லவ் லாக் என்று அழைக்கின்றனர். காதலர்கள் தங்களுக்குள் பிரிவு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த லவ் லாக் செய்கின்றனர். நம்மூரில் சுற்றுலா தளங்களுக்கெல்லாம் சென்று பார்த்தால் சுவர்களில், பாறைகளில் காதலர்கள் தங்களது பெயர்களை பதித்து அம்பு விட்டு இருப்பார்கள். வெளிநாட்டு காதலர்கள் அங்குள்ள பாலங்கள், வேலி போன்ற பொதுஇடத்தில் ஒரு பூட்டை வாங்கி பூட்டுவார்கள். அந்தப்பூட்டில் இவர்களது பெயரோ அல்லது முதல் எழுத்தையோ அடையாளத்துக்காக பதிவிடுவார்கள். இவ்வாறு பாலங்கள் மீது பூட்டை பூட்டிய பின்னர் அந்த சாவியை தூக்கி எறிந்துவிடுவார்கள். தங்களது காதலை யாராலும் உடைக்க முடியாது என்று ஒரு நம்பிக்கை. சரி நாம் விஷயத்துக்கு வருவோம்.
கலிபோர்னியாவை சேர்ந்த Kassie Yeung என்ற 23வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இவரது காதலில் முறிவு ஏற்பட்டுள்ளது. காதலர்களாக இருந்தபோது அந்தப்பெண் தனது காதலருடன் இரண்டு வருடங்களுக்கு முன்பு தென்கொரியாவுக்கு சென்றுள்ளார். தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள உயரமான டவர் மீது இவர்கள் லவ் லாக் செய்துள்ளனர்.
காதல் முறிவு ஏற்பட்டதன் காரணமாக அந்த லவ் லாக்-யை உடைக்க வேண்டும் என கலிபோர்னியாவில் இருந்து தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தென்கொரியாவின் தலைநகருக்கு வந்ததிலிருந்து அந்த உயரமான டவரை அடைந்து லவ் லாக்-கை உடைத்தது வரை அனைத்தையும் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.
தலைநகர் சியோலை வந்தடைந்தது. நேராக ஒரு கடைக்கு சென்று லவ் லாக்கை உடைப்பதற்கான கருவியை வாங்குகிறார். அந்த கருவியுடன் தனது பயணத்தை தொடங்குகிறார். ஒருவழியாக அந்த உயரமான டவரை அடைந்துவிட்டார். ஆனால் இங்குதான் அவருக்கு சிக்கல் காத்திருந்தது. அந்த டவர் முழுவதும் பல வண்ணங்களில் பூட்டுகள் தொங்கிக்கொண்டிருந்தது. எத்தனையோ காதலர்கள் அந்த டவரில் லவ் லாக் செய்திருந்தனர். அத்தனை பூட்டுகளுக்கும் மத்தியில் அவர் பூட்டிய பூட்டை கண்டுபிடித்து அதனை துண்டித்துவிட்டார். பூட்டை கண்டுபிடித்ததும் மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். தனது கடந்த கால காதல் வாழ்க்கையில் இருந்து விடுபடுவதற்காக இவ்வாறு அவர் செய்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.