Home /News /international /

2035 முதல் பெட்ரோல், டீசல் வாகனங்கள் விற்பனைக்கு அனுமதி இல்லை.! கலிஃபோர்னியா அரசு அதிரடி

2035 முதல் பெட்ரோல், டீசல் வாகனங்கள் விற்பனைக்கு அனுமதி இல்லை.! கலிஃபோர்னியா அரசு அதிரடி

காட்சிப் படம்

காட்சிப் படம்

காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக உலகில் பல நாடுகள் எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை படிப்படியாக குறைத்து, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் புழக்கத்தை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • interna, Indiacaliforniacaliforniacalifornia
    காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக உலகில் பல நாடுகள் எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை படிப்படியாக குறைத்து, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் புழக்கத்தை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றன.

    இந்நிலையில், அமெரிக்காவில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான கலிஃபோர்னியா காலநிலை மாற்றத்திற்கு எதிரான போரில் முக்கிய முடிவு ஒன்றை எடுத்து உள்ளது. க்ளீன் எனர்ஜி மொபிலிட்டி ஆப்ஷன்களுக்கு ஆதரவாக வரும் 2035-ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களின் விற்பனையை அனுமதிக்க போவதில்லை என கலிஃபோர்னியா அரசு அறிவித்துள்ளது.

    இந்த அதிரடி முடிவின் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போரில் எரிபொருட்கள் மூலம் இயங்கும் கார்களை தடை செய்துள்ள முதல் அரசாக இருக்கிறது கலிஃபோர்னியா அரசாங்கம்.

    தற்போது கலிஃபோர்னியா அரசால் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவு, 2035-க்குப் பிறகு எரிவாயுவில் இயங்கும் வாகனங்களை ஓட்டுவதற்கும், பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கும் அனுமதிக்கும். ஆனால் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வகையிலான புதிய மாடல் வாகனங்கள் விற்பனை செய்யப்படாது.

    2035 முதல் கலிஃபோர்னியாவில் விற்கப்படும் அனைத்து புதிய கார்களும் பூஜ்ஜிய உமிழ்வை (zero emission) கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கலிஃபோர்னியா அரசு கூறி இருக்கிறது. இது தொடர்பாக சமீபத்தில் கலிஃபோர்னியா ஏர் ரிசோர்சஸ் போர்டு (California Air Resources Board) வெளியிட்டுள்ள இந்த புதிய விதி, 2026 முதல் ஜீரோ-எமிஷனை தரும் வாகனங்களின் உற்பத்தியை விரைவுபடுத்த வாகன உற்பத்தியாளர்களை கட்டாயப்படுத்துகிறது. இதன்படி 2026 முதல் கலிஃபோர்னியாவில் விற்கப்படும் அனைத்து வாகனங்களில் மூன்றில் ஒரு பங்கு பூஜ்ஜிய உமிழ்வை கொண்டிருக்க வேண்டும். இந்த இலக்கை விட குறைவாக விற்கும் வாகன உற்பத்தியாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட கூடும் என தெரிகிறது.

    இதையும் வாசிக்க: இருவேறு தம்பதியினருக்கு ஒரேமாதிரி பிறந்த குழந்தைகள்.. எப்படி சாத்தியம்?

    கலிஃபோர்னியாவில் காலநிலை மாற்றத்திற்கு காரணமாக இருக்கும் வாயு வெளியேற்றத்தின் மிகப்பெரிய ஆதாரமாக போக்குவரத்து துறை உள்ளது. மேலும் கலிஃபோர்னியா வரலாறு காணாத காட்டுத்தீ, வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள மோசமான காற்று மாசு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எரிபொருட்களில் இயங்கும் கார்களின் விற்பனைக்கு 2035-ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படும் என்ற கலிஃபோர்னிய அரசின் முடிவ, புவி வெப்பமடைதலுக்கு காரணமான மாசுபாட்டைக் குறைக்கும் மாகாணத்தின் முன்னணி நடவடிக்கையாக இருக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். எரிபொருள் வாகனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த முடிவால், 2040-க்குள் கார்களில் இருந்து வெளியேறும்மாசுவை கலிஃபோர்னியா பாதியாக குறைக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இதையும் வாசிக்க: மாசில்லா ரயில்! ஜெர்மனியில் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை.. அதன் சிறப்பம்சங்கள் இதோ

    கலிஃபோர்னியாவின் சுறுசுழல் துறை அதிகாரிகள் கூறுகையில், தங்கள் மாகாணத்தின் இந்த புதிய கொள்கையானது அடுத்த 13 ஆண்டுகளில் உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Automatic car, Automobile

    அடுத்த செய்தி