ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உலகத்தை ஸ்தம்பிக்க செய்துள்ள கொரோனா வைரஸ் பல நாடுகளில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுக்குள் இருந்த பல நாடுகளில் மீண்டும் அடுத்த அலையாக டெல்டா வேரியண்ட் உட்பட பல உருமாறிய கொரோனா வைரஸ்கள் தலைதூக்கியுள்ளன. எனினும் கொரோனா வைரஸை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு ஒருவதற்கான ஒரே வழியாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒரே விஷயமாக இருக்கிறது கொரோனா தடுப்பூசி.
மக்கள் தங்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு திருப்ப நினைத்தால் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வைரஸுக்கு எதிரான போரில் முன்களத்தில் இருக்கும் சுகாதார வல்லுநர்கள் உட்பட பல மருத்துவர்கள் உலக மக்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் கொரோனா தடுப்பூசிகளுக்கு எதிராக குரலும் எழாமல் இல்லை. தடுப்பூசி போட்டு கொண்டதால் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே தடுப்பூசியால் பலனில்லை, அடுத்தடுத்து பல வேரியண்ட் கொரோனா வைரஸ்கள் உலகம் முழுவதும் பரவி வருவதால் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தடுப்பூசிகள் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்காது என்ற பிரச்சாரமும் உலகம் முழுவதும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் ஒரு ரெஸ்டாரன்ட் 'தடுப்பூசி போடாத' (unvaccinated) வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் கருத்துப்படி, கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் (Huntington Beach) அமைந்திருக்கும் பசிலிகோஸ் பாஸ்தா இ வினோ (Basilico’s Pasta e Vino) என்ற இத்தாலிய உணவகம், தனது ரெஸ்டாரன்டின் ஜன்னல்களில் இது தொடர்பான தகவல் அடங்கிய போஸ்டரை ஒட்டியுள்ளது.
இதே உணவகம் கடந்த ஆண்டு நோய் தொற்று காலத்தின் போது "மாஸ்க் ப்ரீ மண்டலம்" (mask-free zone) என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பொது சுகாதாரத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட இந்த இத்தாலியன் ரெஸ்டாரன்ட் மீது புகார் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் சமீபத்தில் தங்களது உணவகத்தில் உணவருந்த விரும்பும் வாடிக்கையாளர்கள் தடுப்பூசி போடவில்லை என்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் என்று கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை என்பதற்காக என்ன ஆதாரத்தை ரெஸ்டாரன்ட்டில் வாடிக்கையாளர்கள் காண்பிக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆனால் இது குறித்து தகவல் தெரிவித்துள்ள பசிலிகோஸ் உணவகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் நிர்வாகத்தினர் உண்மையில் எந்த ஆதாரத்தையும் சரிபார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் மீண்டும் இறுகி வரும் நேரத்தில், கோவிட்-19 நெறிமுறைகளுக்கு எதிரான இத்தாலியன் ரெஸ்டாரன்டின் இந்த செயல் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. சமீபத்தில் வீடியோ ஒன்றில் Basilico’s Pasta e Vino-வின் உரிமையாளர் டோனி ரோமன் (Tony Roman), தொற்று பரவலை தடுக்க லாக்டவுன் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு எதிராக பேசினார். உயிர் காப்பதாக கூறப்படும் தடுப்பூசிக்கு எதிரான தங்கள் நிலைப்பாடு பசிலிகோவின் பிரகடனம் மற்றும் எதிர்ப்பின் உறுதிமொழி என்றார். லாக்டவுன் போடப்பட்டாலும் கூட உணவகங்களை திறந்தே வைத்திருக்குமாறு கூறி உள்ளார்.
View this post on Instagram
மாஸ்க்குகள் லாக்டவுன் அமல்படுத்துவதற்கான மிகப்பெரிய ஆயுதமாக இருக்கின்றன. அமெரிக்க மக்களிடையே அச்ச உணர்வை உருவாக்கவும் பயன்படுத்தப்பட்டன என்றும் டோனி ரோமன் கூறி உள்ளார். டோனி ரோமன் நிலைப்பாடு மாஸ்க் மற்றும் தடுப்பூசிக்கு எதிரானது என்றாலும், தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே உணவக மால்கள் மற்றும் பிற பொது இடங்களில் அனுமதி வழங்கப்படும் என்று கூறிய சம்பவங்களும் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona positive, Corona Vaccine, Covid-19, Restaurant