’ஒரு சதவிகிதம் கூட கட்டுப்படுத்த முடியவில்லை...’ 20 ஆயிரம் ஏக்கர் வனத்தை நாசமாக்கிய கலிபோர்னியா காட்டுத்தீ

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 20 ஆயிரம் ஏக்கருக்கு பரவியுள்ள காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், காட்டுத் தீயை ஒரு சதவீதம் கூட கட்டுப்படுத்த முடியவில்லை என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

’ஒரு சதவிகிதம் கூட கட்டுப்படுத்த முடியவில்லை...’ 20 ஆயிரம் ஏக்கர் வனத்தை நாசமாக்கிய கலிபோர்னியா காட்டுத்தீ
கலிபோர்னியா காட்டுத்தீ (Image: AFP)
  • News18
  • Last Updated: August 3, 2020, 8:55 AM IST
  • Share this:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைட் கவுண்டி என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் காட்டுத் தீ ஏற்பட்டது. ஒரு சில மணி நேரங்களில் மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியதை அடுத்து, தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள், காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனாலும், தொடர்ந்து தீ பரவியதால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கத் தொடங்கியது.

இந்த காட்டுத் தீ-க்கு Apple fire என பெயரிட்ட அதிகாரிகள், வனப்பகுதியை ஒட்டி 2500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில், ஏராளமான தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தியும் கட்டுக்கடங்காத காட்டுத் தீ, 20 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு பரவியது.


இதையடுத்து, சிறிய ரக விமானங்களை பயன்படுத்தி, தீயை அணைக்கும் ரசாயனப் பொடியை தூவும் பணி நடைபெற்று வருகிறது. ரசாயனப் பொடியை தூவும் பணியில் ஏராளமான சிறிய ரக விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படும் நிலையில், ஒரு சதவீதம் கூட காட்டுத் தீயை கட்டுப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

https://twitter.com/i/status/1289762840614588416

இருப்பினும், தீயை அணைக்க கடும் முயற்சிகளை செய்து வருவதாக கூறும் அதிகாரிகள், மனித உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஏராளமான வன விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading