• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

கலிஃபோர்னியா காட்டுத்தீ

கலிஃபோர்னியா காட்டுத்தீ

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் காட்டுத் தீ-க்கு வனத்துறையின் நிர்வாகக் குறைபாடே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் 3 இடங்களில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் தீயை அணைக்கும் பணி மேலும் சிக்கலாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள கேம்ப் ஃபயர் (CAMP FIRE), தெற்கு பகுதியில் உள்ள ஹில் ஃபயர் (Hill Fire), ஊஸ்லி ஃபயர் (Woolsey Fire) ஆகிய பகுதியில் கடந்த வியாழக்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது. 3 பகுதிகளில் தீ ஏற்பட்டிருந்தாலும் இதில் கேம்ப் ஃபயர் பகுதியில் ஏற்பட்ட தீ அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், அந்தப் பகுதியில் தீ மளமளவென பரவியது. வீடுகள், வணிக வளாகங்கள் என 7000 கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளன. பாரடைஸ் நகரமே நரகமாக காட்சியளிக்கிறது.

சுமார் 10,5,000 ஏக்கர் பரப்பிலான காடுகள் தீயில் எரிந்துள்ளன. இதுவரை 23 பேர் உடல் கருகிய நிலையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். 20 விழுக்காடு தீ மட்டுமே இதுவரை அணைக்கப்பட்டுள்ளது. இது கலிபோர்னியாவின் 3-வது மிகப்பெரிய தீ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தன் வீட்டருகே காட்டித்தீ வராமல் இருக்க முயற்சிக்கும் ஒருவர்


தென் கலிஃபோர்னியாவில் உள்ள ஊஸ்லி ஃபயர் பகுதியில் ஏற்பட்ட தீ, ஒரே இரவில் இரு மடங்கு வேகத்தில் பரவி 70,000 ஏக்கர் காடுகளை சேதப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாதளமான மலிபூ பகுதியில் 177 கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளன. இந்தப் பகுதியில் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹில் ஃபயர்- ஐ பொறுத்தவரை 4,500 ஏக்கர் பரப்பிலான காடுகள் தீக்கிரையாகியுள்ளன. மொத்தம் 3000 வீரர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் செவ்வாய்க்கிழமை வரை இதனை கட்டுக்குள் கொண்டு வருவது சிரமமானது எனவும் அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.







இந்த சூழலில் வனத்துறையின் நிர்வாகக் குறைபாடே இந்த காட்டுத்தீக்கு காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதிவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கலிஃபோர்னிய தீயணைப்புத்துறை, அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையையும் முன்வைத்துள்ளது.

Also see... `சர்கார்’ கதை திருட்டை வன்மையாக கண்டிக்கிறேன் - பவர் ஸ்டார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: