ஹோம் /நியூஸ் /உலகம் /

6 கால்களுடன் பிறந்ததால் புறக்கணிக்கப்பட்ட கன்று.. இணையத்தில் குவிந்த ஆதரவால் மறுவாழ்வு கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம்

6 கால்களுடன் பிறந்ததால் புறக்கணிக்கப்பட்ட கன்று.. இணையத்தில் குவிந்த ஆதரவால் மறுவாழ்வு கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம்

கன்று

கன்று

வடக்கு அயர்லாந்தில் உள்ள ஒரு மாட்டுப்பண்ணையில் காளை கன்று 6 கால்களுடன் பிறந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  வடக்கு அயர்லாந்தில் உள்ள ஒரு மாட்டுப்பண்ணையில் காளை கன்று 6 கால்களுடன் பிறந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் 6 கால்களுடன் பிறந்த அந்த கன்றை அதன் உரிமையாளர் ஒரு குறைபாடாகவே பார்த்தார். அந்த கன்று பண்ணையில் உள்ள மற்ற உயிரினங்களால் புறக்கணிக்க கூடும் என கவலையடைந்தார். ஏனெனில் இப்படி ஒரு சம்பவம் முற்றிலும் இயற்கைக்கு முரணானது என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும் இந்த அதிசய சம்பவம் அந்நாட்டில் மிகப்பெரிய அளவில் வைரலானது. அயர்லாந்தில் உள்ள சமூக ஊடக நண்பர்கள் கன்றின் குறைபாட்டை ‘ஏஞ்சல் சிறகுகள்’ என்று அழைக்கத் தொடங்கினர்.

  தனியே புறக்கணிக்கபட்ட கன்றுக்கு புதிய வீட்டைக் கண்டுபிடிப்பதற்கான பிரச்சாரத்தை சமூக வலைத்தளங்களில் தொடங்கினர். விவசாயம் செய்து வரும் பண்ணையின் உரிமையாளர். ஆரம்பத்தில் கன்றின் ‘ஏஞ்சல் சிறகுகளை’ அதாவது கூடுதல் கால்களை பிரித்தெடுக்க திட்டமிட்டிருந்தார். இருப்பினும், அவரது கால்நடை மருத்துவர் கன்றுக்குட்டியின் கூடுதல் கால்களில் ஒன்று அவரது முதுகெலும்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே கால்களை பிரித்தெடுப்பது என்பது சற்று கடினம். இதனால் விவசாயி, நட் ஹவுஸ் ஹென் ரெஸ்க்யூ & ரீ-ஹோமிங் என்ற தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.

  கன்று நிம்மதியாக வாழக்கூடிய ஒரு மகிழ்ச்சியான வீட்டைக் கண்டுபிடிக்க அவர்களின் உதவியை நாடினார். வளர்ப்பு பெற்றோரைத் தேடுவதற்காக இந்த அமைப்பு பேஸ்புக்கில் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது. அதில், அவர்கள் கன்றைப் பற்றிய விவரங்களை வெளியிட்டனர். மேலும் கன்றினை தனது மந்தைகளிலிருந்து பிரிப்பதில் விவசாயி நிறைய உழைக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தனர். தத்தெடுக்க ஆர்வமுள்ளவர்கள் நிறுவனத்தை அணுகலாம் என்றும் பதிவிட்டிருந்தனர். இதையடுத்து இந்த பதிவு பரவலாக அனைவராலும் பகிரப்பட்டது. மேலும், "ஆறு கால்கள் கொண்ட கன்றைப் பற்றிய பதிவு பகிரப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சுமார் 49,000 பேரை சென்றடைந்தது. 300 க்கும் மேற்பட்ட கருத்துகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட செய்திகள் கிடைத்ததைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்" என்று தொண்டு நிறுவனம் மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளது.

  டிஜிட்டல் தளங்களில் கன்றுக்கான புதிய பண்ணை தேடும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கன்று தனது வாழ்நாள் முழுவதும் தங்க ஒரு புதிய பண்ணை வீடு கண்டுபிடிக்கப்பட்டதாக தொண்டு நிறுவனம் சமீபத்தில் ஒரு பதிவினை வெளியிட்டது. ஆனால் கன்றை யார் தத்தெடுத்து என்ற விவரங்களை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளது. கன்று தற்போது தஞ்சம் அடைந்துள்ள புதிய வீடு அநேகமாக வடக்கு அயர்லாந்திலேயே இருக்கலாம் என்றும் கன்றுக்குட்டிக்கு பெரும்பாலும் தோர் (Thor) என்று பெயரிடலாம் எனவும் தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. கன்றினை தத்தெடுத்த அந்த நபருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

  Published by:Ram Sankar
  First published:

  Tags: Ireland