• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • அம்மாடியோவ்...! பழங்கால டெலிபோன் பூத்-க்கு இவ்வளவு விலையா? - செடி விற்பனை செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்!

அம்மாடியோவ்...! பழங்கால டெலிபோன் பூத்-க்கு இவ்வளவு விலையா? - செடி விற்பனை செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்!

பழங்கால டெலிபோன் பூத்

பழங்கால டெலிபோன் பூத்

தாவரங்களை காட்சிப்படுத்த, ஒரு பழங்கால சிவப்பு நிற தொலைபேசி பூத்தை, சாலையோரம் வைத்து, பயன்படுத்திக் கொண்டிருந்தார்

  • Share this:
கேக்டஸ் என்ற சப்பாத்திக்கள்ளி செடிகள் விற்பனை செய்வதற்கு பழங்கால டெலிபோன் பூத் ஒன்றை பயன்படுத்திய வணிகருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

சிவப்பு நிற டெலிபோன் பூத்களை நினைவிருக்கிறதா? அதன் மூலம் ஒருவருக்கு ஜாக்பாட் கிடைத்துள்ளது. ஒருவருக்கு அதிர்ஷ்டம் எந்த நேரத்தில் எப்படி மாறும் என்று கூற முடியாது. திடீரென்று அதிர்ஷ்டம் அடித்தால் எப்படி இருக்கும்? யுகேவில் உள்ள நார்ஃபோல்க்-ல் சப்பாத்திக்கள்ளி செடிகள் விற்பனை செய்து வந்த ஒருவருக்கு அதிர்ஷ்டம் பழங்கால பொருள் வடிவில் கிடைத்துள்ளது. 53 வயதான சைமன் வார்ட், தன் இரு நண்பர்களுடன், சிம்ப்ளி கேக்டஸ் என்ற சப்பாத்திக்கள்ளி செடி (கேக்டஸ்) விற்பனையை கடந்த மாதம், டாம்ப்லேண்டில் தொடங்கினார். இந்த கடையை, ஒரு சிவப்பு நிற டெலிபோன் பூத்தில் செடிகளை அழகாக அடுக்கி வைத்து, விற்பனை செய்து வந்தார்.

Also Read:  ரூ.500 செலவில் திருமணம்.. அசத்திய பெண் மாஜிஸ்திரேட் - ராணுவ மேஜர் ஜோடி

தாவரங்களை காட்சிப்படுத்த, ஒரு பழங்கால சிவப்பு நிற தொலைபேசி பூத்தை, சாலையோரம் வைத்து, பயன்படுத்திக் கொண்டிருந்தார். சைமன் மற்றும் அவரது நண்பர்கள் டிமோ மலகோரி மற்றும் டானி டாக்லியாஃபெரா ஆகியோர் இடவசதி குறைவாக இருந்ததால் சைமனின் வீட்டில் பயன்படுத்தப்படாமல் கிடந்த சிவப்பு தொலைபேசி பெட்டியைப் பயன்படுத்த முடிவு செய்தனர்.

சமீபத்தில், சிவப்பு தொலைபேசி பெட்டியைக் கவனித்த ஒரு வாடிக்கையாளர், அதை பரிசோதனை செய்தார். பரிசோதனையில் அது ஒரு பழங்காலப் பொருள் என்றும், அதன் விலை சில லட்சங்களாவது இருக்கும் என்றும் கண்டறியப்பட்டது. இந்த தொலைபேசி பூத் ஆன்லைனில் ஏலத்திற்கு விடப்பட்டு, தற்போது, ஆரம்ப விலையாக £35,000, அதாவது சுமார் 36 லட்சம் ரூபாய்க்கு வைக்கப்பட்டுள்ளது.

Also Read:   ரூ.8 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சொந்தக்காரர் வெறும் ரூ.35,000 மின்சாரம் திருடி சிக்கினார்!

"எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தொலைபேசி பெட்டியின் புகைப்படங்களை எடுக்க ஒருவர் வந்து, அதை விற்பனைக்கு வைக்கச் சொன்னபோதுதான் எனக்கே தெரிந்தது. தொலைபேசி பூத் இப்போது ஏலத்திற்கு வந்துள்ளது. இதன் ஆரம்ப விலை £35,000. நான் அதை 6 மாதங்களுக்கு குத்தகைக்கு எடுத்தேன். ஆனால் இனி கேக்டஸ் வணிகம் அப்படியே நின்று விடும் என்று தோன்றுகிறது” என்று கடையின் உரிமையாளர் கூறினார். சிறிய பகுதியை வாடகைக்கு எடுக்க வார்டு ஆண்டுக்கு £3,000 மட்டுமே செலுத்துகிறார். இதிலே, மின்சார சேவையோடு, 8 அடி 3 அங்குல உயரத்தில் உள்ளது.

Also Read:   Meesho App-ல் பணம் சம்பாதிப்பது எப்படி? இதோ எளிமையான வழிமுறைகள்!

மறுபுறம், சைமன் தனது டெலிபோன் பூத்தின் விற்பனையால் வருத்தமாகக் காணப்படுகிறார். தனது நிறுவனத்தின் வெற்றியில் இந்த பூத் மிகவும் முக்கியமானது என்று அவர் கூறுகிறார். பெட்டி மக்களின் கவனத்தை ஈர்க்கவும், மக்களை அதை நோக்கி இழுக்கவும் பயன்படுகிறது. சைமன் இரண்டு பெட்டிகளில் செடிகளை விற்கப் பயன்படுத்தினார், அவற்றில் ஒன்று, மில்லியன் டாலர்கள் மதிப்புடையது. இரண்டாவது பெட்டி சாதாரணமானது. ஒரு பெட்டி விற்கப்பட்டால், தொடர்ந்து தங்கள் வணிகத்தை இயக்க முடியாது என்று மூன்று உரிமையாளர்களும் கவலைப்படுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யுனைடெட் கிங்டம்-ல் இது போல ஏராளமான பழங்கால தொலைபேசி பெட்டிகள் உள்ளன. இதுபோன்ற ஆயிரக்கணக்கான பெட்டிகள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன. சைமன் மற்றும் அவரது வணிகக் கூட்டாளிகள் இருவரும் இந்த செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: