முகப்பு /செய்தி /உலகம் / வங்கதேசம் இந்தியா இடையே மீண்டும் பேருந்து சேவை - 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்

வங்கதேசம் இந்தியா இடையே மீண்டும் பேருந்து சேவை - 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்

இந்திய வங்கதேச பேருந்து சேவை

இந்திய வங்கதேச பேருந்து சேவை

Bus transport between India-Bangladesh: இரு நாடுகளுக்கு இடையேயான அகௌரா-அகர்தலா மற்றும் பெனாபோல்-ஹரிதாஸ்பூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் (ஐசிபி) வழியாக பேருந்து சேவைகள் திறக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வங்கதேசம்-இந்தியா இடையேயான பேருந்து சேவைகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்குகின்றன

வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் பேருந்து சேவைகள் ஜூன் 10 வெள்ளிக்கிழமை அன்று கொடியசைத்து மீண்டும் தொடங்கியது. டாக்காவில் இருந்து கொல்கத்தாவிற்கு பேருந்துகள் அனுப்பப்பட்டன. இரு நாடுகளுக்கு இடையேயான அகௌரா-அகர்தலா மற்றும் பெனாபோல்-ஹரிதாஸ்பூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் (ஐசிபி) வழியாக பேருந்து சேவைகள் திறக்கப்பட்டுள்ளது.

மே 29 அன்று டாக்கா-கொல்கத்தா மற்றும் கொல்கத்தா-குல்னா இடையே முறையே மைத்ரீ எக்ஸ்பிரஸ் மற்றும் பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொடியசைத்து தொடங்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் பேருந்து சேவைகளும் திறக்கப்பட்டுள்ளன. நியூ ஜல்பைகுரி மற்றும் டாக்கா இடையே மிதாலி எக்ஸ்பிரஸ் என்ற புதிய 2 வாரத்திற்கு 1முறை செல்லும் ரயிலையும் ஜூன் 1 ஆம் தேதி இந்தியா மற்றும் வங்கதேச ரயில்வே அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அசாம் , மேகாலயாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை - 6 மாத குழந்தை உட்பட 31பேர் உயிரிழப்பு

பேருந்து சேவைகள் திறக்கப்படுவது சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களுடனான தொடர்புகளை பலப்படுத்தும். இரு நாடுகளுக்கும் இடையே தேவையான அனுமதிகள் கிடைத்த பிறகு Dawki-Tamabil ICP மூலம் பேருந்து சேவைகள் தொடங்கப்படும். இரு நாடுகளுக்கும் இடையே  மக்களை மையமாகக் கொண்ட தொலைத் தொடர்பை மேம்படுத்துவதில் இது ஒரு பெரிய முன்னெடுப்பு என்று வங்காளத்தில் அமைந்துள்ள இந்திய உயர் அதிகார அமைப்பு ட்வீட் செய்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக சேவைகள் நிறுத்தப்படுவதற்கு முன்பு இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே ஐந்து வழித்தடங்கள் இயக்கப்பட்டன. இதில் டாக்கா-கொல்கத்தா-டாக்கா, டாக்கா-அகர்தலா-டாக்கா, அகர்தலா-டாக்கா-கொல்கத்தா-அகர்தலா, டாக்கா-குல்னா-கொல்கத்தா-டாக்கா உள்ளிட்ட நான்கு வழித்தடங்கள் மீண்டும் இயக்கப்படும். டாக்கா-சில்ஹெட்-ஷில்லாங்-கௌஹாத்தி-டாக்கா பாதை மட்டும் சிறிது காலம் கழித்து திறக்கப்படும் என்று அரசு தரப்பில் செய்தி வெளியாகியுள்ளது.

First published:

Tags: Bangladesh, India, Transport