• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • திருடப்போன இடத்தில் எமர்ஜென்சி நம்பருக்கு கால்செய்து மாட்டிக்கொண்ட நண்பர்கள்.. சொந்த செலவில் சூனியம் வைத்த கதை என்ன?

திருடப்போன இடத்தில் எமர்ஜென்சி நம்பருக்கு கால்செய்து மாட்டிக்கொண்ட நண்பர்கள்.. சொந்த செலவில் சூனியம் வைத்த கதை என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

கடந்த 2019-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்த ஒரு கடையில் திருடச் சென்ற கொள்ளையர்கள் தெரியாமல் 911-க்கு டயல் செய்து மாட்டிக்கொண்டனர்

  • Share this:
பெரும்பாலும் ஆண்கள், அவர்கள் உபயோகிக்கும் தொலைபேசிகளை தங்களது பாக்கெட்டுகளில் வைத்து கொள்வது வழக்கம். அப்படி பாக்கெட்டில் வைக்கும் சமயத்தில் ஸ்க்ரீன் லாக் போடாத போன்களில் இருந்து எதிர்பாராத அழைப்புகள் யாருக்காவது சென்றுவிடும். பல நேரங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. அதேபோல, ஸ்கீன் லாக் செய்யாமல் போன்களை பர்சில் வைக்கும் பெண்களுக்கும் இதே நிலைமை தான். ஆனால் இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. 

சில சமயங்களில் ஒருவரை பற்றி ஏதேனும் செய்திகளை உங்கள் நண்பருக்கு அனுப்பும் போது, தங்களை அறியாமலேயே அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள நபருக்கு தவறுதலாக அனுப்பி பிறகு மாட்டிக்கொள்வர். இந்த விஷயங்களும் பெரும்பாலானோர் வாழ்க்கையில் நடந்துள்ளது. இருப்பினும் இதை விட துரதிர்ஷ்டவசமான சம்பவம் இங்கிலாந்தில் (England) உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்கள் (Burglars) இருவருக்கு நடந்துள்ளது. தங்களுக்கு தெரியாமலேயே இங்கிலாந்து அவசர எண்ணிற்கு டயல் செய்து போலீசாரிடம் மாட்டிக்கொண்டனர். கொள்ளையடிக்க வந்தவர்களில் ஒருவரின் வயது 49, மற்றொருவருக்கு 42.

இரு கொள்ளையர்களில் ஒருவரிடம் இருந்து காவல்துறையின் அவசர எண்ணிற்கு போன் கால் வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை கைது செய்ததாகவும் ஸ்டாஃபோர்ட்ஷையர் (Staffordshire) காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும் அவசர எண்ணிற்கு டயல் செய்தது கூட தெரியாமல் கொள்ளையர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை காவல்துறையினர் அமைதியாக கேட்டனர். 

மேலும் படிக்க: சட்டவிரோத இன்ஸ்டண்ட் கடன் ஆப்ஸ்களிடம் ஜாக்கிரதை.. டிஜிட்டல் கடன் மோசடிகளுக்கு எதிராக SBI கூறுவது என்ன?

இதையடுத்து இருவரையும் கைது செய்த இன்ஸ்பெக்டர் ஜான் ஓவன் கூறியதாவது "உலகின் துரதிர்ஷ்டவசமான கொள்ளையர்களை நாங்கள் கைது செய்துள்ளோம் என்று நான் நினைக்கிறேன்," எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையரில் ஸ்டோக்-ஆன்-ட்ரெண்டின் மிடில் போர்ட் எனும் பகுதியில் கடந்த 6-ஆம் தேதி மாலை நடந்துள்ளது.  கைது செய்யப்பட்ட இருவரும் காவல்துறை கஸ்டடியில் ஒரு நாள் முழுவதும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த நகைச்சுவை புயல் வடிவேலு நடித்த ஒரு படக்காட்சியின்  பாணியில் உள்ளது. இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் ஜான் ஓவன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "ஹோம் அலோன் (Home Alone) திரைப்படத் தொடரின் கொள்ளைக்காரரான மார்வின் காட்சிகளை இந்த சம்பவம் உள்ளடக்கியுள்ளது. கொள்ளையடிக்க சென்றவர்களில் ஒருவர், கவனக்குறைவாக அவரது தொலைபேசியின் மீது அமர்ந்துள்ளார். 

எதிர்பாராத விதமாக போனில் இருந்து இங்கிலாந்து அவசர எண்ணுக்கு அழைப்பு சென்றுள்ளது. ரோந்துப் படையினர் அவர்களைக் கைது செய்ய வருவதைக் அறியும் வரை அவர்களின் அனைத்து செயல்களையும் போன் கால் மூலம் எங்களது அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருந்தனர்" என தெரிவித்தார். பின்னர் இரண்டு கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் சில ஏற்கனவே நடந்துள்ளன. கடந்த 2019-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்த ஒரு கடையில் திருடச் சென்ற கொள்ளையர்கள் தெரியாமல் 911-க்கு டயல் செய்து மாட்டிக்கொண்டனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Gunavathy
First published: