ட்ரம்ப் அறிவித்த புதிய விசா நடைமுறையை விமர்சிக்கும் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ்

’ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் வெளிநாட்டிலிருந்து வரும் மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்’.

ட்ரம்ப் அறிவித்த புதிய விசா நடைமுறையை விமர்சிக்கும் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்
  • News18
  • Last Updated: May 17, 2019, 10:48 PM IST
  • Share this:
அமெரிக்காவில் குடிமக்கள் அடையாளத்துடன் வாழ விரும்பும் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் ‘கிரீன் கார்டு’ முறையை ‘பில்ட் அமெரிக்கா’ என மாற்றி தகுதியானவர்களுக்கும் திறன் மிக்கவர்களுக்கு மட்டுமே இனி விசா வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஆனால், இந்த நடைமுறை முற்றிலும் குறுகிய நோக்கம் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது என 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் அமெரிக்கவாழ் இந்தியருமான கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் குடியேற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கல்வி மற்றும் திறன் சார்ந்த அடிப்படையில் சில புள்ளிகள் வழங்கலாம். ஆனால், குடும்பம் சார்ந்து விசா வழங்கமுடியாது என்பது போல திறன் மற்றும் கல்வி மட்டுமே குடியுரிமையை நிச்சயிக்கும் என்பது சம உரிமை இல்லை. ஆசியாவைச் சேர்ந்த மக்கள் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்தே இடம்பெயருகின்றனர்” எனக் குறிப்பிட்டார்.


இதுபோன்ற ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் வெளிநாட்டிலிருந்து வரும் மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் என்றும் அது அமெரிக்காவின் நடைமுறை இல்லை என்றும் கமலா ஹாரிஸ் விமர்சித்தார்.

மேலும் பார்க்கபுதிய குடியேற்றக் கொள்கையை வெளியிட்டார் டொனால்டு டிரம்ப்!
First published: May 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...