• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • தாலிபான்கள் செய்த கொடூரச் செயல்: முன்னாள் துணை அதிபரின் சகோதரருக்கு நேர்ந்த அவலம்!

தாலிபான்கள் செய்த கொடூரச் செயல்: முன்னாள் துணை அதிபரின் சகோதரருக்கு நேர்ந்த அவலம்!

amrulla saleh

amrulla saleh

தாலிபான்களை எதிர்த்து போரிட்டு வரும் அகமது மசூத் தலைமையிலான எதிர்ப்புப் படையினருடன் அம்ருல்லா சலே இணைந்து தாலிபான்களுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

  • Share this:
ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலேவின் சகோதரர் தாலிபான்களால் சித்தரவதை செய்து கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்துள்ள நிலையில் அங்கு முன்னாள் அரசுத் துறை அதிகாரிகள், பெண்கள், விளையாட்டு வீரர்கள், பத்ரிகையாளர்கள் என தங்களுக்கு பிடிக்காதவர்களாக கண்டறிந்து அவர்களை அடித்து துன்புறுத்தி கொலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் பஞ்ஷிர் தவிர ஏனைய மாகாணங்கள் அனைத்தும் தாலிபான்கள் பிடியில் உள்ளது. பஞ்ஷிரில் மட்டும் தாலிபான்களுக்கு எதிரான நிலைமை நீடித்து வருகிறது. அங்கு பஞ்ஷிர் போராளிகள் தாலிபான்களை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் பஞ்ஷிர் முழுவதும் மண்ணின் மைந்தர்களான பஞ்ஷிர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் தாலிபான்கள் பெருமளவில் படைகளை குவித்து பஞ்ஷிருக்குள் நுழைந்து போராளிகளை வேட்டையாடத் தொடங்கினர். ஊர்களுக்குள் தாலிபான்கள் நுழைந்துள்ளதால், போராளிகள் அனைவரும் மலை மீது ஏறி தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கிருந்தவாறே உணவு, உறைவிடம் இன்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, பஞ்ஷிரில் நுழைந்துள்ள தாலிபான்கள் முன்னாள் ஆப்கன் துணை அதிபர் அம்ருல்லா சலேவின் சகோதரர் ரோகுல்லா அசிசியை கைது செய்து பின்னர் அவரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ரோகுல்லா அசிசி பஞ்ஷிர் போராளிகள் குழுவின் முக்கிய கமாண்டராக ரோகா மாவட்டத்தில் செயல்பட்டவர்.

Also Read: இந்த போன்களில் இனி வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது – 2021 தான் கடைசி!

இது குறித்து ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சலேவின் குடும்பத்தைச் சேர்ந்த எபதுல்லா சலே அனுப்பியுள்ள தகவலில், எனது மாமா ரோகுல்லா அசிசியை தாலிபான்கள் கொலை செய்துள்ளனர். அடக்கம் செய்வதற்காக அவரின் சடலத்தை குடும்பத்தினரிடம் வழங்காமல் உடலை அப்படியே அழுக விட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தாலிபான்கள் காபுலை கைப்பற்றிய ஆகஸ்ட் 15ம் தேதி, அப்போதைய ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி, நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிலையில், தீரத்துடன் தாலிபான்களை எதிர்ப்பேன், அரசியலமைப்பு சட்டப்படி நான் தான் தற்போதைய ஆப்கன் அதிபர் என அம்ருல்லா சலே பிரகடனம் செய்து கொண்டார். அவர் பஞ்ஷிரை சேர்ந்தவர். அங்கு தாலிபான்களை எதிர்த்து போரிட்டு வரும் அகமது மசூத் தலைமையிலான எதிர்ப்புப் படையினருடன் அம்ருல்லா சலே இணைந்து தாலிபான்களுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார். அதே நேரத்தில் தாலிபான்கள் குறித்தும் பாகிஸ்தான் குறித்தும் கடுமையாக பேசி வந்ததன் காரணத்தால் அவரை தாலிபான்கள் சில முறை கொலை செய்ய முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:   டிடர்ஜெண்ட், குளியல் சோப் விலை உயர்வு – இல்லத்தரசிகள் ஷாக்!

இதனிடையே அம்ருல்லா சலேவின் சகோதரரை தாலிபான்கள் கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: