இந்தியர்கள் உட்பட 23 பேருடன் சென்ற இங்கிலாந்து கப்பலைச் சிறைபிடித்த ஈரான்!

பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் பகுதியில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறைப் பிடித்துள்ளது.

இந்தியர்கள் உட்பட 23 பேருடன் சென்ற இங்கிலாந்து கப்பலைச் சிறைபிடித்த ஈரான்!
கப்பல்
  • News18
  • Last Updated: July 20, 2019, 7:51 PM IST
  • Share this:
இந்தியர்கள் உட்பட 23 பேருடன் சென்ற இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறைப்பிடித்ததால் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.

அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தை மீறியதாக ஈரான் மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடை விதித்தது. அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் தடை விதித்தது.

இதனிடையே சிரியாவுக்கு கச்சா எண்ணெய் கடத்தி சென்றதாக ஈரான் கப்பலை இங்கிலாந்து சிறைப்பிடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் பகுதியில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறைப் பிடித்துள்ளது.


தங்கள் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததால் சிறை பிடித்ததாகவும் கூறியுள்ளது. ஆனால், சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு பயணம் மேற்கொண்டதாக இங்கிலாந்து கூறியுள்ளது.

மேலும் பார்க்க:
First published: July 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading