ஹோம் /நியூஸ் /உலகம் /

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் முதல் நாடாளுமன்ற உரை... அமைச்சரவையை கலைக்க எதிர்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தல்...

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் முதல் நாடாளுமன்ற உரை... அமைச்சரவையை கலைக்க எதிர்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தல்...

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

Rishi Sunak | கீர் ஸ்டார்மரின் கேள்விக்கு பதிலளித்த சுனக், பிராவர்மேன் தனது தவறுகளை உணர்ந்து விட்டதாகவும், அதனால் அவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டதாகவும் கூறினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் முதல் நாடாளுமன்ற உரையின்போது, அமைச்சரவையை கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர்.

  பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் சுனக்கிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கீர் ஸ்டார்மர், உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகிய சுவெல்லா பிராவர்மேன்-னை மீண்டும் பதவியில் அமர்த்தியது இருவருக்கும் இடையே நடைபெற்ற மிக மோசமான ஒப்பந்தம் என குற்றம்சாட்டினார்.

  மேலும் அவரை மீண்டும் பதவியில் அமர்த்தியது ஏன்? எனவும் அவர் வினவினார். அரசின் ரகசிய ஆவணங்களை தனது அமைச்சரகத்திற்கு வெளியே மின்னஞ்சல் அனுப்பிய புகாரில் பிராவர்மேன் அண்மையில் பதவி விலகியிருந்தார்.

  இதையும் படிங்க : தண்ணீல கண்டம்.. 60 ஆண்டுகள் குளிக்காமல் இருந்த முதியவர்.. குளித்த சில நாளில் உயிரிழந்த சோகம்

  இதனைத்தொடர்ந்து கீர் ஸ்டார்மரின் கேள்விக்கு பதிலளித்த சுனக், பிராவர்மேன் தனது தவறுகளை உணர்ந்து விட்டதாகவும், அதனால் அவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டதாகவும் கூறினார்.

  பின்னர் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இதனால் தற்போதைய அமைச்சரவையை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர்.

  இதையடுத்து, பிரிட்டன் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் நவம்பர் 17ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படும் என்ற ரிஷி சுனக்கின் அறிவிப்புக்கும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Rishi Sunak