போரிஸ் ஜான்சனின் இந்திய பயண திட்டம் பாதியாக குறைப்பு..

போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண திட்டம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் இந்தியா வர இருந்தார். இருப்பினும் இங்கிலாந்தில் கொரோனா 2வது அலை வீசியதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இம்மாத இறுதியில் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவார் என அறிவிக்கப்பட்டது.

  டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்யும் அவர், தொழிலதிபர்களுடன் கலந்துரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா 2வது அலை வீச தொடங்கி உள்ளதால் போரிஸ் ஜான்சனின் இந்திய சுற்றுப்பயணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி போரிஸின் புதிய பயண விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க... அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு தடை?  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: