ஹோம் /நியூஸ் /உலகம் /

மாணவர்கள் கண்காணிப்பில் 6-ம் வகுப்பு தேர்வு எழுதிய எம்.பிக்கள் - பிரிட்டனில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

மாணவர்கள் கண்காணிப்பில் 6-ம் வகுப்பு தேர்வு எழுதிய எம்.பிக்கள் - பிரிட்டனில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

தேர்வு எழுதிய பிரிட்டன் எம்பிகள்

தேர்வு எழுதிய பிரிட்டன் எம்பிகள்

10-11 வயது கொண்ட 6ஆம் வகுப்பு மாணவர்களின் திறனை சோதிக்கும் SAT தேர்வை பிரிட்டன் நாடாளுமன்ற எம்பிக்கள் எழுதினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaLondonLondonLondon

தேர்வுகள் மூலம் பள்ளி மாணவர்கள் சந்திக்கும் கஷ்டங்களை அறிந்துகொள்வதற்காக பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்ற எம்பிக்கள் மாணவர்களின் கண்காணிப்பின் கீழ் தேர்வு எழுதிய வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொதுவாக மாணவர்களிடம் தேர்வு குறித்து பெரியவர்கள் தேர்வு குறித்து கேள்வி கேட்டால் அவர்கள் பதிலுக்கு நீங்க வந்து எழுதி பார்த்தா தான் அதோட கஷ்டம் புரியும் என்று ஆதங்கத்துடன் பதில் கூறுவார்கள்.

குறிப்பாக, நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள் கல்வி தகுதி மற்றும் அறிவு குறித்து பலரும் விமர்சித்து அவர்களுக்கு தேர்வு வைக்க வேண்டும் வேடிக்கையாக கூறுவதும் உண்டு. ஆனால், அப்படி ஒரு சம்பவம் நிஜமாகவே பிரிட்டன் நாட்டில் நடைபெற்றுள்ளது. அந்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கு தேவையில்லாமல் பல தேர்வுகளை வைத்து கஷ்டத்தை தருவதாக பள்ளிக் கல்வி துறைக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. எனவே, சில தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரப்புரையாக நடைபெற்று வருகிறது.

இந்த கோரிக்கை வலுவடைந்ததால் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அதிரடி முடிவு எடுத்தனர். மாணவர்களின் எதிர்கொள்ளும் தேர்வின் கடினத்தை அறிந்து கொள்வதற்காக அந்நாட்டின் எம்பிக்கள் ஒரு குழுவாக சென்று அவர்களே பரிட்சை எழுதியுள்ளனர். 10-11 வயது கொண்ட 6ஆம் வகுப்பு மாணவர்களின் திறனை சோதிக்கும் SAT தேர்வை இந்த எம்பிக்கள் எழுதினர். லண்டனில் உள்ள தேர்வை மையத்தில் எம்பிக்கள் தேர்வை எழுத மாணவர்களே தேர்வு கண்காணிப்பாளர்களாக இருந்தனர்.

இதையும் படிங்க: 'இனி சீனா வேண்டாம் சாமி..' ஐபோன் தொழிற்சாலைகளை வேறு நாடுகளுக்கு மாற்ற ஆப்பிள் திட்டம்!

இந்த தேர்வை நாடாளுமன்ற கல்வி குழு தலைவரான ராபின் வால்கரும் எழுதினார். ஆங்கிலம், கணிதம் சார்ந்த கேள்விகள் இந்த தேர்வில் கேட்கப்பட்ட நிலையில், வெறும் 44 சதவீத எம்பிகள் மட்டுமே கணிதத்தில் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய தரத்துடன் தேர்ச்சி அடைந்தனர். அதேபோல், ஆங்கில இலக்கணம், உச்சரிப்பு ஆகியவற்றில் சுமார் 50 சதவீதம் எம்பிக்களே தேர்ச்சி பெற்றனர். 10,11 வயதை உடைய 6ஆம் வகுப்பு மாணவர்களை விட மோசமான தேர்ச்சி முடிவுகளை எம்பிக்கள் எடுத்துள்ளனர்.

கடைசியாக நடந்த தேர்வில் 59 சதவீத மாணவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், தேர்வை ஒழித்துவிடும் முடிவை எம்பிக்கள் எடுக்காவிட்டாலும், இந்த தேர்வுகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

First published:

Tags: Britain, Exam, London, Test