எவரெஸ்ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர் உயிரிழந்த சோகம்

நேபாள அரசு அளவுக்கு அதிகமான பெர்மிட் வழங்கியதும், இந்த சீசனில் பனிப்பொழிவு வழக்கத்தை விட அதிகமாக இருப்பதுமே எவரெஸ்டில் கடும் நெரிசல் ஏற்பட காரணம் என தெரியவந்துள்ளது.

news18
Updated: May 26, 2019, 9:54 AM IST
எவரெஸ்ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர் உயிரிழந்த சோகம்
எவரெஸ்ட்
news18
Updated: May 26, 2019, 9:54 AM IST
எட்ட முடியாத சிகரமாக விளங்கிய உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட், இன்று கடும் கூட்ட நெரிசலுக்கு ஆளாகி, திக்குமுக்காடி வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் அங்கு பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.

எவரெஸ்ட் என்றாலே அன்னாந்து பார்க்க முடியாத உலகின் மிக உயரமான சிகரம் என்பதை உலகே அறியும். இன்றும் பாட புத்தகங்களில் எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் கால் பதித்த டென்சிங், எட்மண்ட் ஹிலேரியை சிலாகித்து பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த அளவிற்கு எளிதில் எட்ட முடியாத உச்சபட்ச சாதனையாக எவரெஸ்ட் கருதப்பட்ட காலம் உண்டு. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நவீன உபகரணங்கள், மலையேற்ற பயிற்சி மையங்கள் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சீசனில் மலையேற்ற வீரர்களின் படையெடுப்பால் எவரெஸ்டில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.சிகரத்தை நெருங்கிவிட்டாலும் மேற்கொண்டு நகரமுடியாமல் உடலை உறைய வைக்கும் குளிரில் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. எவரெஸ்ட் சிகரம் அருகே சாரை, சாரையாக, மலையேற்ற வீரர்கள் காத்திருக்கும் காட்சி வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்த சீசனில் மட்டும் எவரெஸ்டில் 10 பேர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ராபர்ட் பிஷர் என்பவர் சிகரத்தில் இருந்து இறங்கும்போது நேற்று உயிரிழந்தார். அயர்லாந்தை சேர்ந்த கெவின் ஹைன்ஸ் என்பவர் சிகரத்தின் அருகே வரிசையில் நின்றபோது பிராணவாயு குறைந்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதுதவிர கடந்த வாரத்தில் மட்டும் ஒரு பெண் உள்பட நான்கு இந்தியர்கள் எவரெஸ்டில் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர்.நேபாள அரசு அளவுக்கு அதிகமான பெர்மிட் வழங்கியதும், இந்த சீசனில் பனிப்பொழிவு வழக்கத்தை விட அதிகமாக இருப்பதுமே எவரெஸ்டில் கடும் நெரிசல் ஏற்பட காரணம் என தெரியவந்துள்ளது. ஒரு பெர்மிட்டை நேபாள அரசு 8 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளது. இந்த சீசனில் மட்டும் இதுவரை 380 பேருக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. 807 பெர்மிட்டுகள் எனும் கடந்த ஆண்டு சாதனையை 2019-ம் ஆண்ட மிஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதால், பெர்மிட்டுகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கையை மலையேற்ற வீரர்கள் முன்வைத்துள்ளனர்.
Loading...
Also watch

First published: May 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...