குழந்தை அழுததால் விமானத்திலிருந்து குடும்பத்தோடு இறக்கிவிட்ட இந்தியர்கள்

news18
Updated: August 9, 2018, 12:41 PM IST
குழந்தை அழுததால் விமானத்திலிருந்து குடும்பத்தோடு இறக்கிவிட்ட இந்தியர்கள்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்
news18
Updated: August 9, 2018, 12:41 PM IST
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யவிருந்த இந்திய தம்பதியரின் குழந்தை அழுததால் அவர்களை விமான ஊழியர்கள் இறக்கிவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லண்டனில் இருந்து கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி பெர்னில் நகருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற ஐஇஎஸ் அதிகாரியின் குடும்பத்தினர் ஏறி அமர்ந்தனர். இதையடுத்து அவர்களின் 3 வயது குழந்தையை அதன்  தாய் சீட்டில் அமர வைத்து சீட் பெல்ட் போட்டுள்ளார்.

குழந்தை இருக்கையில் சரியாக அமர முடியாமல் அழத் தொடங்கியது. அதனால் குழந்தையை கையில் எடுத்து அவரது தாய் சமாதானப்படுத்த தொடங்கினார். அப்போது அழுது கொண்டிருந்த குழந்தையிடம் அங்கிருந்த பயணி ஒருவர் கோபமாக மிரட்டி இருக்கையில் உட்காரும்படி கூறியுள்ளார். இதனால் பயந்துபோன குழந்தை, இன்னும் அதிகமாக அழத் தொடங்கியது. அப்போது பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு இந்திய குடும்பத்தினர்  குழந்தைக்கு பிஸ்கெட் கொடுத்து அழுகையை நிறுத்த முயன்றனர்.

இதனை தொடர்ந்து விமானம் ஓடுபாதையில் ஓட துவங்கிய நிலையிலும் குழந்தை வீறிட்டு அழுதுகொண்டிருந்தது. அப்போது அந்த பயணி மீண்டும் சத்தமிட்டு அங்கு வந்த விமான ஊழியரிடம் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து  ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானம் டெர்மினலுக்கு திருப்பும்படி உத்தரவிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்திய குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், அவர்களை  வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். இதனால் கடும் சிரமத்திற்கு ஆளான அவர்கள் இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்  சுரேஷ் பிரபுவுடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில், விமான ஊழியர் தங்களிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும், இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் திட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
First published: August 9, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...