கொரோனா மரணம் இல்லாத நாள்: பிரிட்டனிலிருந்து நற்செய்தி

போரிஸ் ஜான்சன்

மார்ச் 2020-ல் பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் கொரோனாவினால் மரணம் நிகழாதா நாளாக நேற்றைய தினம் அமைந்துள்ளது.

 • Share this:
  இதனை பிரிட்டன் அரசு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,27,782 ஆக உள்ளது. செவ்வாயான்று 3,165 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட மொத்த எண்ணிக்கை 44 லட்சத்து 90 ஆயிரத்து 438 ஆக உள்ளது.

  இந்நிலையில் பிரிட்டன் அரசு ஆலோசகர் எச்சரிக்கையில், பிரிட்டனில் தடுப்பூசி நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் நாம் இன்னும் பயங்கர வைரஸுக்கு எதிரான போரிலிருந்து இன்னமும் முழுமையாக மீண்டு விடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

  Read More:  சீனாவில் மனிதர்களுக்கு புதிய வகை பறவைக்காய்ச்சல் பாதிப்பு
   பிரிட்டன் தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு மேம்பாட்டு இணைக்குழுவில் உள்ள டாக்டர் ஆடம் ஃபின், பிரிட்டனில் இன்னமும் நிறைய மக்களுக்கு தடுப்பூசி செலுத்ததாதல் நாம் வைரஸ் அச்சுறுத்தலிலிருந்து முழுமையாக மீண்டு விடவில்லை என்பது நினைவிலிருக்கட்டும் என்று எச்சரித்தார்.

  “வேலை முடிந்து விட்டது என்ற எண்ணம் தவறு. இன்னும் நிறைய பேர் வைரஸால் பாதிக்கப்படாமல் உள்ளனர், அல்லது வாக்சின் போடப்படாமல் உள்ளனர். அதனால்தான் பாதிக்கப்படக் கூடிய நிலையிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை என்று எச்சரிக்க வேண்டியுள்ளது” என்றார்.

  Read More:  சீன விஞ்ஞானிகள்தான் கொரோனா வைரஸை உருவாக்கினார்களா? ஆராய்ச்சியாளர்கள் குற்றச்சாட்டு

  பிரிட்டன் அரசு செய்திகளின் படி, 39.4 மில்லியன் மக்களுக்கும் கூடுதலாக முதல் டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பரவி வரும் வேரியண்ட்டின் தாக்கம் இன்னும் குறையாததால் ஸ்காட்லாந்தில் லாக்டவுன் தளர்வுக்கு சில காலம் பிடிக்கும் என்று தெரிகிறது.

  Read More: தமிழகத்தில் வெகுவாக குறையும் கொரோனா தொற்று, குறையாத உயிரிழப்பு

  ஐஏஎன்எஸ் செய்தி ஏஜென்சியின் தகவல்களின் படி கொரோனா வைரஸ் வரும் ஆண்டுகளில் பரிணாமம் அடையும், அதனால் இப்போதைய வாக்சின்கள் அப்போது பயனில்லாமல் போகலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
  Published by:Muthukumar
  First published: