Home /News /international /

பிரிட்டன் ராணி எலிசபெத் காலமானார் - பக்கிங்ஹாம் அரண்மணை அறிவிப்பு

பிரிட்டன் ராணி எலிசபெத் காலமானார் - பக்கிங்ஹாம் அரண்மணை அறிவிப்பு

ராணி எலிசபெத்

ராணி எலிசபெத்

Queen Elizabeth II Died | ராணி எலிசபெத்தின் மறைவிற்கு உலக தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு உடல் நல குறைவு  காரணமாக உயிரிழந்தார் என்பதை பக்கிங்ஹாம் அரண்மணை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கியிருந்த 96 வயதான பிரிட்டன் மகாராணி எலிசபெத்திற்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தீவிர கண்காணிப்பில் வைக்கும்படி அறிவுறுத்தினர். ராணியின் குடும்பத்தினர் அனைவரும் பால்மாரல் அரண்மனைக்கு விரைந்தனர்.

    உடல் நல குறைவால், புதன் கிழமை நடைபெற்ற அமைச்சர்களின் ஆலோசனையிலும் அவர் பங்கேற்கவில்லை. வழக்கமாக பக்கிங்ஹாம் அரண்மணையில், புதிய பிரதமரை சந்திக்கும் ராணி, இம்முறை பால்மாரல் அரண்மனையில் சந்தித்தார்.



    இந்நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த ராணி எலிசபெத் காலமானார் என்று க்கிங்ஹாம் அரண்மணை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராணி எலிசபெத்தின் மறைவிற்கு உலக தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Queen Elizabeth

    அடுத்த செய்தி