Elizabeth Britain Queen Death: அகில உலகத்தவரின் நேசத்தை பெற்றவர் ராணி எலிசபெத் - கமல்ஹாசன்

Queen Elizabeth II Passes Away | பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார் என்பதை பக்கிங்ஹாம் அரண்மணை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

  • News18 Tamil
  • | September 09, 2022, 12:15 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 19 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    11:28 (IST)

    அகில உலகத்தவரின் நேசத்தை பெற்றவர் ராணி எலிசபெத் - கமல்ஹாசன்

    எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.

    9:46 (IST)

    தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில், "பிரிட்டன் அரசு குடும்பத்தில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிப்பதாகவும், 70 ஆண்டுகள் பதவியில் இருந்து, 15 பிரதமர்களை நியமித்து, நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குக் காரணமாக இருந்தவரின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    9:45 (IST)

    ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இங்கிலாந்து மக்களும் அரச குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்பு உணர்வுடனும், கண்ணியமாகவும் நீண்டகாலம் ஆட்சிபுரிந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்,

    7:36 (IST)


    ராணி எலிசபெத்தின் உடல்  10-வது நாளில் அடக்கம்

    ராணி எலிசபெத்தின் உடல் எடின்பர்கில் உள்ள அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும், பின்னர் லண்டன் பக்கிங்காம் அரண்மனை கொண்டு செல்லப்பட்டு 10-வது நாளில் அடக்கம் செய்யப்படும்.

    7:20 (IST)

    ராணி எலிசபெத் மறைந்ததுமே அவரது 73 வயது மகன் சார்லஸ் மன்னர் ஆனார். அவர் மூன்றாம் சார்லஸ் மன்னர் என அழைக்கப்படுவார். மன்னர் சார்லஸ் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் தனது அன்பிற்குரிய தாய் ராணி எலிசபெத்தின் மரணம் தனக்கும் குடும்பத்தாருக்கும் மிகப் பெரும் சோகம் என்றும் அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    23:34 (IST)

    பிரிட்டன் ராணி எலிசபெத் உடனான நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி

    23:33 (IST)

    பிரிட்டன் ராணி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

    23:32 (IST)

    பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு 96 வயதில் உடல் நல குறைவு  காரணமாக உயிரிழந்தார் என்பதை பக்கிங்ஹாம் அரண்மணை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.