ஒரே வாரத்தில் இங்கிலாந்தை தாக்கிய 2 புயல்கள் : சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர்..!

ஒரே வாரத்தில் இங்கிலாந்தை தாக்கிய 2 புயல்கள் : சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர்..!
இங்கிலாந்து
  • News18 Tamil
  • Last Updated: February 17, 2020, 11:06 AM IST
  • Share this:
இங்கிலாந்தின் வேல்ஸ் நகரை டென்னிஸ் புயல் சூறையாடியது. இரவு முதல் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புயல், மழையில் சிக்கி இதுவரை இருவர் உயிரிழந்தனர்.

இங்கிலாந்து நாட்டை கடந்த வார இறுதியில் சியாரா புயல் தாக்கியது. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்குள் டென்னிஸ் என்ற புதிய புயல் உருவானது. இது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புயல் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், வேல்ஸ் நகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் தெற்கு வேல்ஸ் நகரை சூறையாடியுள்ளது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை வெறும் 48 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் பெரும்பாலான ஆறுகளின் கரைகள் உடைந்து தண்ணீர் குடியிருப்புப் பகுதியை சூழ்ந்துள்ளது.


சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளுக்குள் புகுந்த நீரை மக்கள் வாளிகள் மூலம் தெருக்களில் கொட்டி வருகின்றனர்.

அரசு தரப்பிலும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின் மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணியும் நடக்கிறது. குடியிருப்புகளுக்குள் சிக்கியுள்ளவர்கள் ரப்பர் படகுகள் மூலமாக மீட்கப்படுகின்றனர்.

Also see...
First published: February 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading