பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி: லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்.. நிபுணர்களின் எச்சரிக்கை என்ன?

பிரிட்டனில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி: லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்.. நிபுணர்களின் எச்சரிக்கை என்ன?
ஊரடங்கு காரணமாக பிரிட்டனில் பொருளாதாரம் சரிந்தது
  • Share this:
பிரிட்டன் நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு அந்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி ஆய்வுகளை வெளியிட்டுள்ளது. இதில் 2020ஆம் ஆண்டின் 2-வது காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.4 சதவிகிதம் சரிந்துள்ளது.

மார்ச் 30 வரையிலான காலாண்டில் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் 2 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிவைச் சந்தித்தது. பொதுவாக எந்தொரு நாடு தொடர்ந்து 2 காலாண்டுகளாகப் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்கிறதோ, அப்போது பொருளாதார மந்தநிலை அறிவிக்கப்படும்.

2007 முதல் 2008 வரையிலான ஆண்டுகளில் அமெரிக்காவில் பல வங்கிகள் நிதி நெருக்கடியால் மூடப்பட்டபோது, உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது. அப்போதும் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் அதிகப்படியாக 2.1 சதவீதம் வரையில் தான் சரிவை சந்தித்தது. ஆனால் கொரோனா முடக்கத்தின் எதிரொலியாக இப்போது 20.4 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.


பிரிட்டனில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மார்ச் 23-ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டின் மொத்த வர்த்தகமும் தடைபட்டது. சேவைத் துறையை பெரிதும் நம்பியிருக்கும் பிரிட்டன், பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

பொருளாதார மந்தநிலை காரணமாக பிரிட்டனில் கோடிக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் கருவூலத்தலைவர் ரிஷி சுனாக் எச்சரித்துள்ளார்.

இதேபோல் Eurozone-ன் பொருளாதார புள்ளி விவரங்களும் வெளியாகியுள்ளது. இந்தப் புள்ளி விவரத்தில் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளின் பொருளாதாரமும் அடக்கம். 2020ஆம் ஆண்டின் 2-வது காலாண்டில் Eurozone-ன் பொருளாதாரம் 12.1 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.அதிகபட்சமாக ஸ்பெயினின் பொருளாதாரம், 18.5 சதவிகிதம் சரிந்துள்ளது. கொரோனா முடக்கம் காரணமாக உலக பொருளதாரம் 5.2 சதவிகிதம் சரிவை சந்திக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

மேலும் படிக்க...சிபிஐ, வருமான வரித்துறை அதிகாரிகள் எனும் பேரில் கொள்ளையடித்த கும்பல்.. 100 சவரன் நகை மீட்பு.. சிக்கியது எப்படி?

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நிலவிய சரிவுக்கு பின்னர் ஏற்படும் மிகப்பெரிய மந்தநிலை என்றும் உலக வங்கி கூறியுள்ளது. உலக மக்களின் தனிநபர் வருமானம் 3. 6 சதவிகிதம் வரை குறையும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading