Home /News /international /

வரலாறு காணாத வறட்சியில் சிக்கி தவிக்கும் பிரிட்டன்.. புகழ்பெற்ற தேம்ஸ் நதி வறண்டது!

வரலாறு காணாத வறட்சியில் சிக்கி தவிக்கும் பிரிட்டன்.. புகழ்பெற்ற தேம்ஸ் நதி வறண்டது!

பிரிட்டனில் வரலாறு காணாத வறட்சி

பிரிட்டனில் வரலாறு காணாத வறட்சி

உலகப் புகழ்பெற்ற தேம்ஸ் நதி பிரிட்டனில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வற்றி வருவதாக லண்டன் நகர்ப்புற நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    புவி வெப்பமயமாதல், கால நிலை மாற்றம் போன்ற சிக்கலால் கடந்த சில ஆண்டுகளாகவே ஐரோப்பாவிலும் சராசரி வெப்பநிலையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தற்போது காட்டுத் தீ பரவல் பெருமளவில் நிகழ்ந்து வருகிறது.

    குறிப்பாக, பிரிட்டன் நாட்டில் வரலாற்றிலேயே முதல்முறையாக ரெட் வார்னிங் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகபட்சமாக 38.7 டிகிரி வெப்பம் தான் பிரிட்டனில் பதிவான நிலையில், அங்கு இம்முறை வெப்பமானது 40 டிகிரி தாண்டியுள்ளது. வெப்ப பாதிப்பை எதிர்கொள்ள அரசு சார்பில் அவசர குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 1935ஆம் ஆண்டுக்குப் பின் மிக மோசமான வறட்சியை இங்கிலாந்து சந்தித்துள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வழக்கமான மழையில் 35 சதவீத மழை மட்டுமே கடந்த ஜூலை மாதம் கிடைத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், உலகப் புகழ்பெற்ற தேம்ஸ் நதி இந்த வறட்சி காரணமாக வற்றி வருவதாக லண்டன் நகர்ப்புற நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது. 356 கிலோ மீட்டர் நீளம் கொண்ட லண்டன் தேம்ஸ் நதி லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்தின் 1.5 கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

    இந்தாண்டு ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக நதியின் தொடக்கமான மூலப் பகுதி வறண்டு விட்டதாக நகர்ப்புற நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சூழல் குறித்து கால நிலை நிபுணரும், ரீட்டிங் பல்கலைக்கழக பேராசிரியருமான ஹன்னா கோல்க் கூறுகையில், "நதி வறட்சி ஏற்படுவது காரணமாக குடிநீர், பாசனம், தொழில் தேவை போன்ற மக்கள் பயன்பாடு பாதிப்பை சந்திப்பதுடன், நீர் வாழ் உயிரிகளும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மழை பெய்யவில்லை என்றால் அடுத்து வரும் மாதங்களை சமாளிப்பதும் கடும் சவாலாகிவிடும். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த கோடைக் காலத்தில் கடைகளில் நீரே கிடைக்காத சூழல் உருவாகிவிடும். எனவே, மக்கள் மத்தியில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்" என்றார்.

    இதையும் படிங்க: கொரோனாவை பரப்பிய தென் கொரியாவை சும்மா விடமாட்டோம்..வட கொரியா எச்சரிக்கை

    பிரிட்டன் போலவே, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் வெப்ப பாதிப்பு தீவிரமாக உள்ளது.வெப்ப காற்று காரணமாக ஸ்பெயின், போர்ச்சுகலில் சுமார் 10,000 ஹெக்டேர் பரப்பளவு காடுகள் தீக்கிரையாகியுள்ளன. பிரான்சில் 7,300 ஹெக்டேர் பரப்பளவு காடுகள் தீயில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அசாதாரண சூழல் காரணமாக மக்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: England, Heat Wave

    அடுத்த செய்தி