மணக்கோலத்தில் 300 கி.மீ பயணம் செய்து தன் தாத்தாவைச் சந்தித்த மணப்பெண் - லண்டனில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

மாதிரிப்படம் (Reuters)

தனது திருமணத்தன்று, முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த தன் தாத்தாவை 300 கி.மீ பயணம் செய்து மணப்பெண் கோலத்தில் பேத்தி சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று லண்டனில் நடந்துள்ளது.

  • Share this:
COVID-19 தொற்று நோயால் உலகம் முழுக்க மக்கள் எளிமையான திருமணங்களை நடத்தி வருகின்றனர். தொற்றுநோய்களுக்கு ஆளாக நேரும் என்று எண்ணி, விழாக்களிலும் சுப நிகழ்வுகளிலும் பங்குகொள்வதை பலரும் தவிர்த்து வருகின்றனர். அதிலும், வயதானவர்களும் நோயுற்றவர்களும் இந்த கொரோனா காலத்தில் மற்ற அனைவரையும் விட தன் சுதந்திரச் செயல்பாட்டை அதிகம் இழந்து வருகின்றனர். இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த ஒரு பெண் தன்னை திருமணக் கோலத்தில் தன் செல்ல தாத்தா காண வேண்டும் என விரும்பி பெரும் சிரமத்தை மேற்கொண்டுள்ளார்.

லண்டனில் கிரஹாம் பர்லி எனும் முதியவர் தனது குடும்பத்திலிருந்து விலகி பராமரிப்பு இல்லத்தில் வசித்து வருகிறார். இந்தச் சூழலில் அவரது பேத்திக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரால் தனியாக பயணம் செய்ய முடியாததால் தனது பேத்தியின் திருமணத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. அவர் மிகவும் வயதானவர் என்பதோடு அவருக்கு ’பார்கின்சன்’ என்ற நடுக்குவாத நோயும் உள்ளது.

Also read: 6 மாதங்களுக்கு திறக்கப்பட்ட தாஜ்மஹால் - முதல் ஆளாக பார்வையிட்ட சீனர்



மணப்பெண்ணான அவரது பேத்தி அலெக்ஸ் பியர்ஸ் (36) ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். அவர் தனது தாத்தா இந்த விஷயத்தில் ஏமாற்றமடைந்துவிடக் கூடாது என நினைத்தார். மற்ற மணப்பெண்கள் திருமணமான கையோடு தேனிலவுக்கோ தங்களின் புகுந்த வீட்டிற்குகோ செல்வது வழக்கம். ஆனால் அலெக்ஸ், மணமகனுடன் தன் காரில் ஏறினார். தனது திருமண உடையில் கேக்கையும் வைனையும் எடுத்துக்கொண்டு தாத்தாவைக் காண கிட்டத்தட்ட 320 கி.மீ. பயணம் செய்தார்.

கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டதோடு, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பயணித்த புதுமணத் தம்பதியினர் இருவரும் தாத்தாவைச் சந்தித்தனர். இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்திராத தாத்தா இருவரையும் கண்டதும் அதிர்ந்துபோனார். இத்தகைய ஒரு நன்நாளில் தனது பேத்தியைக் கட்டியணைக்கும் வாய்ப்பை அவருக்கு கொரோனா தொற்றுநோய் சூழ்நிலை வழங்கவில்லை. என்றாலும், அவர் தனது பேத்தியைக் கண்டு திகைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டார். மூவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
Published by:Rizwan
First published: