ஹோம் /நியூஸ் /உலகம் /

'அக்டோபர் 31-ம் தேதி ப்ரெக்ஸிட் நடந்தே தீரும்’- உறுதியளிக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

'அக்டோபர் 31-ம் தேதி ப்ரெக்ஸிட் நடந்தே தீரும்’- உறுதியளிக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

போரிஸ் ஜான்சந் டஸ்க்

போரிஸ் ஜான்சந் டஸ்க்

ஐரோப்பிய யூனியனிடம் பேச்சுவார்த்தை நடத்த ஜான்சன் தயாராக இருப்பதாகவும் பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

எந்த ஒரு சூழ்நிலையானாலும் வருகிற அக்டோபர் 31-ம் தேதி ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் தற்போது ஜி7 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டுக் கூட்டத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் ஆகிய இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பின் போதுதான் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை உறுதி செய்துள்ளார் பிரிட்டன் பிரதமர்.

ஆனால், இன்னமும் ஐரோப்பிய யூனியனிடம் பேச்சுவார்த்தை நடத்த ஜான்சன் தயாராக இருப்பதாகவும் பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அடுத்த மாதம் ஐநா பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதால் ப்ரெக்ஸிட் குறித்து ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டஸ்க் உடன் போரிஸ் ஜான்சன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவு எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் மேல் ஆன போதிலும் இதுவரையில் சுமூகத் தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2-ம் ஆண்டு இனப்படுகொலை தினம்: முகாம்களில் ரோஹிங்கியா அகதிகள் ஊர்வலம்

மேலும் பார்க்க: உலக பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் பி.வி.சிந்து

First published:

Tags: BREXIT