ஹோம் /நியூஸ் /உலகம் /

தப்பித்த தெரேசா மே... சிக்கலில் ப்ரெக்ஸிட்!

தப்பித்த தெரேசா மே... சிக்கலில் ப்ரெக்ஸிட்!

தெரேசா மே

தெரேசா மே

தெரேசா மே-வின் பதவிக்கு ஆபத்தில்லை என்றாலும் ப்ரெக்ஸிட் நிலை சிக்கலில் தான் உள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பிரிட்டனில் கடந்த சில ஆண்டுகளாகப் பல அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வந்தன. மக்கள் ஆதரவுடன் ‘ப்ரெக்ஸிட்’ அமையப் போராடி வருகிறார் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ப்ரெக்ஸிட்டுக்கு எதிர்ப்புக் கிளம்ப தெரேசா மே-வின் பதவிக்கும் ஆபத்து வந்தது. இரண்டு ஆண்டுகளாக ப்ரெக்ஸிட்-க்காகப் பல கட்ட சோதனைகளை எதிர்கொண்டு வரும் தெரேசா, நேற்று தன் பிரதமர் பதவி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டார்.

இதில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் தெரேசா மே. அடுத்த ஓராண்டுக்கு தெரேசாவின் பதவிக்கு நிச்சயம் ஆபத்தில்லை. இதில் தோல்வி அடைந்திருந்தால், ப்ரெக்ஸிட் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயிருக்கும். ஆனால், பதவியைக் காப்பாற்றிக் கொண்டாலும் பிரிட்டன் அரசின் பெரும் தலைவலியாக நீடித்துக் கொண்டிருக்கிறது, ப்ரெக்ஸிட்.

பதவி உறுதி ஆனதும் ஐரோப்பிய யூனியன் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தெரேசா ப்ரெக்ஸிட்-க்காக ஆதரவு திரட்டி வருகிறார். ப்ரெக்ஸிட் மீதான வாக்கெடுப்பு தற்போது ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் வரையில் மட்டுமே ப்ரெக்ஸிட்-க்கு கால அவகாசம் உள்ளது. இதனால் கடுமையாக முயற்சித்து வரும் தெரேச ப்ரெக்ஸிட்டுக்குப் பின், அடுத்தத் தேர்தல் 2022-ல் தான் என்றாலும் முன்னதாகவே பதவியை விட்டு விலகிக்கொள்ளவும் தயாராக இருப்பதாகவே கூறி வருகிறார்.

மேலும் பார்க்க: ஐந்து மாநிலத் தேர்தல்... தோற்றது மோடியா? பாஜக முதல்வர்களா?

First published:

Tags: BREXIT, Theresa May