அமேசானில் காட்டுத் தீயை அணைக்க ஜி7 நாடுகள் வழங்கும் நிதியை ஏற்க தயார்... ஆனால் ஒரு நிபந்தனை - பிரேசில் அதிபர்

news18
Updated: August 28, 2019, 7:09 AM IST
அமேசானில் காட்டுத் தீயை அணைக்க ஜி7 நாடுகள் வழங்கும் நிதியை ஏற்க தயார்... ஆனால் ஒரு நிபந்தனை - பிரேசில் அதிபர்
அமேசான்
news18
Updated: August 28, 2019, 7:09 AM IST
அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக ஜி 7 நாடுகள் வழங்க முன் வந்துள்ள 160 கோடி ரூபாய் நிதியை ஏற்க தயாராக இருப்பதாக பிரேசில் அதிபர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு தேவையான ஆக்ஜிசனில் பெரும் பகுதியை உற்பத்தி செய்யும் அமேசான் காடுகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் தீயை அணைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தீயை அணைப்பதற்காக முதல் கட்டமாக ரூ.160 கோடி நிதியை வழங்குவதாக ஜி7 நாடுகள் அறிவித்தன. ஆனால், இந்த நிதியை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று பிரேசில் அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சோனாரோ, ஜி7 நாடுகள் வழங்க முன்வந்துள்ள நிதியை தாங்கள் நிராகரிக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த நிதியை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக சில நிபந்தனைகள் இருப்பதாக அவர் கூறினார். முதலாவதாக, தனக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்காக பிரான்ஸ் அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தன்னை பொய்யர் என்றும், பின்னர் அமேசானில் தங்களது இறையாண்மை என்பது வெளிப்படையானது என்றும், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேசியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இந்தக் கருத்துக்களை திரும்பப் பெற்றபிறகே, பிரான்ஸுடன் பேச முடியும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Also watch

First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...