பிரேசில் அதிபருக்கு மூன்றாவது முறையும் கொரோனா உறுதி

பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரேசில் அதிபருக்கு மூன்றாவது முறையும் கொரோனா உறுதி
பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சொனாரோ (Reuters)
  • Share this:
போல்சோனாரோவிற்கு கடந்த 7 ஆம் தேதியன்று முதல் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 15 ஆம் தேதி நடந்த இரண்டாவது பரிசோதனையிலும் அவருக்கு தொற்று இருப்பதாகவே தெரியவந்தது.

அப்போது தனிமைப்படுத்தல் விதிகளை அவர் முறையாக பின்பற்றாததால் கொரோனா குணமாவதற்கு தாமதம் அடைவதாக மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

Also read... பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமலேயே போகலாம் - WHO எச்சரிக்கை


இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது பரிசோதனையிலும் போல்சொனாரோவிற்கு பாசிட்டிவ் என முடிவு வெளியாகி உள்ளது.

இதையடுத்து தன் ஆதரவாளர்களை சந்த்தித்து ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு விடைபெற்ற போல்சொனாரோ அடுத்த சில நாட்களுக்கு அல்வோராடா அரண்மனையில் தனிமைப்படுத்தப்படுவார் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading