ஹோம் /நியூஸ் /உலகம் /

தலைக்கேறிய போதை... காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு நிர்வாணமாக ஓட்டம் பிடித்த மாடல் அழகி..!

தலைக்கேறிய போதை... காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு நிர்வாணமாக ஓட்டம் பிடித்த மாடல் அழகி..!

காதலனை துப்பாக்கியால் சுட்ட மாடல் அழகி

காதலனை துப்பாக்கியால் சுட்ட மாடல் அழகி

காதலனின் காரில் தப்பிக்க முயற்சித்த கார் ஓட்டுநரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, Indiabrazilbrazil

  பிரேசிலியாவில் மாடல் அழகி ஒருவர் போதையில் காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஹோட்டலில் இருந்து நிர்வாணமாக ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ், அவரது காதலன் ஜோர்டான் லோம்பார்டியுடன் பிரேசிலியாவில் உள்ள பார்க்கவே ஓட்டலில் தங்கி இருந்தார்.

  இருவரும் வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். இந்த நிலையில் இருவரும் போதையில் ஹோட்டலில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அதிகாலையில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டும் உள்ளது. இதில் ஆத்திரமடைந்த லோம்பார்டி கையில் வைத்திருந்த துப்பாக்கியால் காதலியை மிரட்டியுள்ளார்.

  திடீரென காதலி மார்செல்லா அவரது கையில் இருந்த துப்பாக்கியை பிடிங்கி லோம்பார்டியை சுட்டு விட்டு நிர்வாணகோலத்தில் தப்பியுள்ளார். மேலும் ஹோட்டலின் வாயிலில் இருந்த லோம்பார்டியின் ஓட்டுநரையும் தாக்கிவிட்டு தப்பியுள்ளார்.

  இதையும் படிங்க | பதுங்கு குழி கேள்விப்பட்டிருப்பீங்க, பதுங்கு நகரம் தெரியுமா? பூமிக்கடியில் வாழும் மக்கள்.. ஆஸ்திரேலியாவின் அதிசய நகரம்!

  இதில் படுகாயமடைந்த லோம்பார்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Brazil, Crime News