• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஓடும் பேருந்தில் பாலியல் சீண்டல் - சில்மிஷத்தில் ஈடுபட்டவரை அடித்து துவைத்த சிங்கப்பெண்

ஓடும் பேருந்தில் பாலியல் சீண்டல் - சில்மிஷத்தில் ஈடுபட்டவரை அடித்து துவைத்த சிங்கப்பெண்

இளம்பெண் தாக்கும் காட்சிகள்

இளம்பெண் தாக்கும் காட்சிகள்

மக்கள் யாருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. எல்லோருக்கும் வீடியோ எடுப்பதில் தான் ஆர்வம் உள்ளது என ஓடும் பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண் வேதனையை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பேருந்தில் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நபரை இளம்பெண் ஒருவர் துவைத்து எடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

    இளம்பெண் ஒருவர் அக்டோபர் 20-ம் தேதி உடற்பயிற்சியை முடித்துவிட்டு பேருந்தில் தனது இல்லம் நோக்கி பயணமாகியுள்ளார். பேருந்தில் கூட்டமாக இருந்துள்ளது. இதனைப்பயன்படுத்தி இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியிலாக சீண்டியுள்ளார். அந்தப்பெண் உடனடியாக அந்த நபரை கழுத்தோடு இறுகப்பிடித்த பேருந்தில் வைத்து சத்தம்போட்டுள்ளார். தொடர்ந்து அந்தநபரில் மூக்கில் குத்துவிட்டவர் அவரை கீழே தள்ளி தாக்கியுள்ளார். இந்தக் காட்சிகளை பேருந்தில் பயணம் செய்த பயணிகள் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்த சம்பவமானது பிரேசில் நாட்டில் நடந்துள்ளது. அந்தப்பெண் தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றவர். சம்பவத்தன்று உடற்பயிற்சி முடித்து பேருந்தில் வீடு திரும்பியபோது கூட்டத்தில் பேருந்தில் அந்த இளம்பெண்ணுக்கு பின்னால் நின்றிருந்த வாலிபர் பாலியல் ரீதியில் அந்தப்பெண்ணை தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பெண் அந்த நபரை இறுகப்பிடித்து தாக்கியுள்ளார்.

    அந்த நபரின் மூக்கில் குத்துவிட்டு கீழே தள்ளிய நபர் பேருந்து ஓட்டுனரை நோக்கி வண்டியை காவல்நிலையத்தில் விடுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து பேருந்து காவல்நிலையத்து திருப்பப்பட்டது. அந்த நபர்மீது இளம்பெண் போலீசில் புகார் கொடுத்தார். இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் பாலியல் துன்புறுத்தல் நிரூபிக்கப்பட்டால் அந்த நபருக்கு ஒன்று முதல் ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.



    தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை பற்றி கூறிய பெண் பேருந்தில் பயணம் செய்த சக பயணிகள் யாரும் தனக்கு உதவுவதற்கு முன்வரவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இன்று மக்கள் யாருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. எல்லோருக்கும் வீடியோ எடுப்பதில் தான் ஆர்வம் உள்ளது’ எனக் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: