ஹோம் /நியூஸ் /உலகம் /

2 ஆண்குறியுடன் வாழ்ந்து வந்த சிறுவன்... அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய டாக்டர்கள்

2 ஆண்குறியுடன் வாழ்ந்து வந்த சிறுவன்... அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய டாக்டர்கள்

Representational Image

Representational Image

Two Penis for Brazil Boy | அரிதினும் அரிதாக இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படுவதை மருத்துவ உலகம் டிஃபாலியா என்று அழைக்கிறது. சிறுவனின் உடலில் இருந்து பெரிய ஆண்குறி வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளதாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

2 ஆண்குறியுடன் வாழ்ந்து வந்த சிறுவனின் உடலில் இருந்து ஒரு ஆண்குறி, அறுவை சிகிச்சை மூலமாக வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது. பிறக்கும் 50 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேசில் நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவருக்குத்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 2 ஆண்குறியுடன் வாழ்ந்து வந்தபோதிலும், சிறிய அளவில் இருந்த ஒன்றில் மட்டுமே அவர் சிறுநீர் கழித்துள்ளார். பெரிய ஆண்குறி போதிய செயல்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. முதலில் இந்த பாதிப்பால் சிறுவனுக்கு அவதி ஏற்படவில்லை.  நாளடைவில் வலி ஏற்பட்டதால் அவரது பெற்றோர் மருத்துவர்களை அணுகியுள்ளனர்.

முதல்கட்டமாக ஆய்வு மேற்கொண்ட மருத்துவர்கள், பெரிய ஆண்குறியை நீக்கிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆனால் அதிலும், இரத்த நாளங்கள் சென்றதால், இந்த அறுவை சிகிச்சை சாதாரணமான ஒன்றாக அமையாது என்று அவர்கள் தீர்மானித்தனர்.

இதையும் படிங்க - கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணை-ரஷ்யா சோதனை - உலகில் சிறந்தது என புடின் பெருமிதம்

 இதையடுத்து, மேலும் பல ஆய்வுகள் சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்டது. அரிதினும் அரிதாக இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படுவதை மருத்துவ உலகம் டிஃபாலியா என்று அழைக்கிறது. இந்நிலையில் சிறுவனின் உடலில் இருந்து பெரிய ஆண்குறி வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளதாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதன்முறையாக இதுபோன்ற பாதப்பு 1609ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதன்பின்னர் சுமார் 100 டிபாலியா குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளன. சாதாரணு உறுப்பு நீக்க அறுவை சிகிச்சையை போல் இல்லாமல், கூடுதல் ஆண்குறி நீக்க அறுவை சிகிச்சை சிக்கல் நிறைந்தவை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க - சீனாவில் முக்கிய ஐபோன் ஆலைக்கு அருகில் போடப்பட்ட லாக்டவுன் - சிக்கலை சந்திக்கும் ஆப்பிள் நிறுவனம்

இவ்வாறு பிறவி பிரச்னைகளுடன் இருக்கும் குழந்தைகள் 2 ஆண்குறியுடன் வாழலாம். ஆனால் ஒன்றில் ஆரோக்கிய பிரச்னை காணப்பட்டால் அதனை நீக்க வேண்டும்.

முன்னதாக உஸ்பெகிஸ்தானில் இதேபோன்ற பிரச்னை ஒரு குழந்தைக்கு ஏற்பட்டது. அந்த குழந்தை 2 ஆண்குறியின் வழியேயும் சிறுநீரை வெளியேற்றியது.

கடந்த ஆண்டு ஈராக்கில் ஒரு சிறுவனுக்கு இருந்த 3 ஆண்குறிகளில் 2 வெற்றிகரமாக நீக்கப்பட்டது. பெரும்பாலும் இந்த குறைபாட்டின்போது ஆண்குறிகள் வலது மற்றும் இடது புறமாக காணப்படும். சிலவற்றில் மேலும் கீழுமாக அமைந்திருக்கும்.

First published:

Tags: Brazil