காட்டுத்தீயால் அடையாளம் காணப்பட்ட அமேசானின் ‘உயரமான மரம்’..!

உலகின் மிகவும் உயரமான மரம் கலிஃபோர்னியா ரெட்வுட் மரங்கள் ஆகும். இந்த மரத்தின் உயரம் 379.7 அடி ஆகும்.

Web Desk | news18
Updated: September 5, 2019, 11:04 PM IST
காட்டுத்தீயால் அடையாளம் காணப்பட்ட அமேசானின் ‘உயரமான மரம்’..!
அமேசான் காட்டுத்தீ
Web Desk | news18
Updated: September 5, 2019, 11:04 PM IST
இதுவரையில் தெரியாத ஒரு புது தகவலாக அமேசானின் மிகவும் உயரமான மரம் குறித்த விவரங்களை பிரேசில் மற்றும் பிரிட்டன் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அமேசான் காடுகளில் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டு பல அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான மரங்களும் பறவைகளும் விலங்குகளும் மடிந்தன. ஆனால், இந்தக் காட்டுத்தீயில் எவ்வித சேதாரத்தையும் சந்திக்காமல் சில மரங்கள் இருந்துள்ளன.

மிகவும் உயரமாக இருக்கும் காரணத்தினாலே இந்தக் குறிப்பிட்ட ரக மரங்கள் காட்டுத்தீக்கு இரையாகாமல் இருந்துள்ளன. டினிஜியா எக்செல்சா (Dinizia Excelsa) என்ற மர வகைகள் மிகவும் உயரமானதாக இருந்ததால் காட்டுத்தீயால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. காட்டுத்தீயால் காடு முற்றிலும் சேதமானதால் இந்த மரங்கள் தனியாகத் தெரிந்துள்ளன.


இதன் பின்னர் பிரேசில் மற்றும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த Dinizia Excelsa ரக மரங்களே அமேசானின் மிகவும் உயரமான மரங்கள் என்ற புதிய கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. இவ்வகை மரங்கள் 288 அடி உயரம் கொண்டுள்ளன. சுற்றளவு 5.50 மீட்டர் ஆக உள்ளன.

உலகின் மிகவும் உயரமான மரம் கலிஃபோர்னியா ரெட்வுட் மரங்கள் ஆகும். இந்த மரத்தின் உயரம் 379.7 அடி ஆகும்.

மேலும் பார்க்க: பூமியைவிட பெரிய ஆஸ்டிராய்டு எதுவும் நம்மைத் தாக்க வாய்ப்பில்லை - ஆய்வாளர் விளக்கம்

Loading...

அமேசான் காடுகள் தொடர்ந்து எரிவதற்கு அரசியல் சதி காரணமா ?
First published: September 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...