அமேசான் தீயை அணைப்பதற்காக G-7 நாடுகள் அறிவித்த நிதியுதவியை நிராகரித்த பிரேசில்!

அமேசான் காடுகளில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயால் உலக நாடுகள் மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் தீயை அணைப்பதற்காக G-7 நாடுகள் அறிவித்த நிதியுதவியை நிராகரித்த பிரேசில்!
அமேசான் காடுகள்
  • News18
  • Last Updated: August 27, 2019, 1:07 PM IST
  • Share this:
அமேசான் காடுகளில் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்க ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வழங்கிய 15 கோடி ரூபாய் நிதியை பிரேசில் நிராகரித்துள்ளது.

உலகின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகளில் தொடர்ந்து தீ எரிந்து வரும் நிலையில் அதனை விரைந்து அணைக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதைத்தொடர்ந்து காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜி-7 அமைப்பின் உறுப்பு நாடுகள் முன்வந்துள்ளன.

அதன்படி, பிரான்சில் நடந்த ஜி7 நாடுகளின் மாநாட்டில் 15 கோடியே 80 லட்ச ரூபாயை தீயை அணைப்பதற்கான பிரேசிலுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.


அதனை பிரேசில் நிராகரிப்பதாக அந்நாட்டு அதிபர் பொல் சொனாராவின் உதவியாளர் லொரேன்சோனி தெரிவித்துள்ளார். மேலும் அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது. அத்துடன் பிரானஸ் முதலில் தனது காலனி நாடுகளை கவனிக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க... அமேசான் காடுகளில் வரலாறு காணாத தீ..!
First published: August 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading