முகப்பு /செய்தி /உலகம் / ஆப்ரிக்காவுக்கு வெளியே முதல் உயிரிழப்பு.. உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கம்மை

ஆப்ரிக்காவுக்கு வெளியே முதல் உயிரிழப்பு.. உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கம்மை

குரங்கம்மை பாதிப்பால் இருவர் உயிரிழப்பு

குரங்கம்மை பாதிப்பால் இருவர் உயிரிழப்பு

Monkeypox - பிரேசில் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று பரவல் தீவிரமாக உள்ள நிலையில், குரங்கம்மை பரவலை சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த பாதிப்பு ஆப்ரிக்கா நாடுகளில் மட்டுமே இருந்து வந்த சிலையில், கடந்த மே மாதம் தொடங்கி ஐரோப்பா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. இந்நிலையில், இந்த நோய் பாதித்த ஒருவர் பிரேசில் நாட்டில் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 41. இதன் மூலம் ஆப்ரிக்கா நாட்டிற்கு வெளியே முதல்முறையாக குரங்கம்மை பாதிப்பு காரணமாக உயிரிழப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் இதுவரை சுமார் ஆயிரம் பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் முதல் பாதிப்பானது ஜூன் 10ஆம் தேதி பதிவானது.இதைத் தொடர்ந்து அந்நாட்டில் சுமார் 40 நாள்களில் இந்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.அதேபோல், ஸ்பெயின் நாட்டிலும் ஒருவர் குரங்கம்மை பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். குரங்கம்மையால் ஐரோப்பாவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவே.அந்நாட்டிலும் இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகின் இதுவரை சுமார் 78 நாடுகளில் 18,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பில் 70 சதவீதம் ஐரோப்பாவிலும், 25 சதவீதம் அமெரிக்காவிலும் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பானது குழந்தைகள் மத்தியிலும் பரவி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுவரை சுமார் 80 குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சுமார் 5,000 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு பதிவான நிலையில், நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது. கேரளாவில் 3 பேரும், டெல்லியில் ஒருவரும் குரங்கம்மை பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: நெருப்புடன் விளையாட வேண்டாம்.. 2 மணி நேர தொலைபேசி உரையாடலில் பைடனை எச்சரித்த சீன அதிபர்

இந்த நோய் பாதிப்பு பரவல் குறித்து இங்கிலாந்து சேர்ந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் படி பாதிக்கப்பட்ட 98 சதவீதம் பேர் தன்பாலின உறவில் ஈடுபடும் ஆண்களே என்பது தெரியவந்துள்ளது. உடல் உறவு மூலம் மட்டுமே இந்த நோய் ஏற்படுவதில்லை என்ற போதிலும், இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகும் பெரும்பான்மையினர் தன்பாலின உறவில் ஈடுபடுபவர்கள் என்பது பல்வேறு ஆய்வுகளில் தெரிகிறது. இந்த பாதிப்பு தன்பாலின ஆண்களுக்கே அதிகம் காணப்படுவதால், இவர்கள் உறவில் ஈடுபடும் பார்ட்னர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுரை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Brazil, Monkeypox, Spain, WHO