இந்நிலையில் போல்சொனாரோவிற்கு 100.4 டிகிரி என்ற அளவில் காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் சென்ற அவர் சில பரிசோதனைகளை மேற்கொண்டார். அதன் பின்னர் தன் ஆதரவாளர்களைச் சந்தித்த போல்சோனாரோ தனது நுரையீரல் சுத்தமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இரண்டாவது முறையாக தான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் நெகட்டிவ் என சோதனை முடிவு வந்திருப்பதாகவும் பிரேசில் அதிபர் போல்சொனாரோ பதிவிட்டுள்ளார்.
கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ள பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ தனக்கு கொரோனா பாதிப்பு இல்லையென ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பாதித்திருப்பதால் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இரண்டாவது முறையாக தான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் நெகட்டிவ் என சோதனை முடிவு வந்திருப்பதாகவும் பிரேசில் அதிபர் போல்சொனாரோ பதிவிட்டுள்ளார்.
அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த போல்சனாரூவின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், போல்சனாரூவுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- Informo que meu 2° teste para COVID-19 deu NEGATIVO.
- Boa noite a todos.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.